Category: சம்பவம்

0

பிரதேச சபையின் பிரதி தவிசாளர் சுட்டுக்கொலை

உருஹஸ்மன்ஹந்தவில் இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில்  வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். குறித்த துப்பாக்கிப்பிரயோகத்தில் உயிரிழந்தவர் கரந்தெனிய பிரதேச சபையின்  பிரதி தவிசாளரான டொனால்ட் சம்பத் என பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளே இவர் மீது துப்பாக்கிப்பிரயோகத்தை மேற்கொண்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்....

0

காத்தான்குடியில் தேனீர்க்கடை வயோதிப முதலாளி சுட்டுக்கொலை

தேனீர்கடை முதலாளியான வயோதிபர் மீது இனந்தெரியாதோர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் அவர் உயிரிழந்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர். இச் சம்பவம் நேற்று வெள்ளிக்கிழமை இரவு மட்டக்களப்பு காத்தான்குடி அலியார் சந்தியில் இடம்பெற்றுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கஸ்துரி ஆராய்ச்சி தெரிவித்தார். காத்தான்குடியைச் சேர்ந்த 72 வயதுடைய ஆதம்லெப்பை முகமது...

0

இலங்கை பெண் ஓமானில் தலை துண்டிக்கப்பட்டு கொலை

ஓமானுக்கு பணிப்பெண்ணாக சென்ற இலங்கை பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது. கடந்த 16 ஆம் திகதி குறித்த பெண் இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.தவறான உறவு காரணமாக இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில்...

0

இரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி வைத்தியசாலையில் அனுமதி…..

இரண்டு அகவை சிறுமி நஞ்சருந்திய நிலையில் நேற்றைய தினம் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டமை தொடர்பில் பொலிசாரின் கவனத்திற்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளது.குறித்த சம்பவத்தில் கிளிநொச்சி மாவட்டம் ஜெயபுரத்தைச் சேர்ந்த கௌசிகா என்னும் இரண்டு அகவைச் சிறுமியே நஞ்சருந்திய நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவராவார்.இது தொடர்பில் மேலும் தெரியவருவது ,ஜெயபுரத்தில் பேத்தியாரின் பராமரிப்பில்...

0

முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று அதிகாலையில் இருவருக்கிடையில் மோதல் கத்தி வெட்டில் முடிந்தது.

முல்லைத்தீவு மாவட்டம் நட்டாங்கண்டல் பகுதியில் நேற்று அதிகாலையில் இருவருக்கிடையில் இடம்பெற்ற மோதல் கத்தி வீட்டில் முடிந்தது.ஒருவரின் சடலம் நடு வீதியில் கிடந்த்தோடு மற்றையவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.  குறித்த சம்பவத்தில் ச.சந்திரகுமார் அகவை 33 என்னும் இரு பிள்ளைகளின் தந்தை ஒருவரே  வெட்டிப் படு கொலை செ...

0

வடமாகாண முதலமைச்சருக்கு ஆதரவு தெரிவித்து யாழ் இளைஞன் உண்ணாவிரதம்

வடக்கு மாகாண முதல்வரை அவமதிக்கும் செயலை கண்டித்து யாழ்ப்பாணம் வரணியை சேர்ந்த நாகேந்திரன் துசாந் அடையாள உண்ணாவிரதப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார் யாழ் நகரில் அமைந்துள்ள தந்தை செல்வா சதுக்கத்திற்கு முன்னால் போராட்டத்தில் ஈடுபட்டுவருகிறார்.

0

2020இல் கண்ணிவெடிகளற்ற நாடாக இலங்கை மாறும்!

மிதிவெடிகளுடன் காணப்படும் மீதமுள்ள காணிகளின் 64 சதுர கிலோமீற்றர் அளவான நிலப்பரப்பு, முல்லைத்தீவு மாவட்டத்திலேயே உள்ளதாக, மாவட்டச் செயலாளர் ரூபாவதி கேதீஸ்வரன் தெரிவித்தார். குறித்த பிரதேசங்களிலுள்ள கண்ணிவெடிகளை இரண்டு வருட காலப்பகுதிக்குள் அகற்றுவது தொடர்பாக, ஹலோ ட்றஸ்ட் அரச சார்பற்ற நிறுவனம் முன்னெடுத்துள்ள திட்டம் தொடர்பில் விசாரணை செய்யும்...

0

இலங்கையில் 2014,2015ல் இடம்பெற்ற கொலைகள் எத்தனை தெரியுமா? விபரங்கள் இதோ!

2014 மற்றும் 2015ம் ஆண்டுகளில் இடம்பெற்ற கொலைகள், பெண்கள் துஷ்பிரயோகம், தற்கொலைகள் உள்ளிட்ட சில விடயங்கள் தொடர்பான விரிவான அறிக்கை, இன்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகரவால், வௌியிடப்பட்டது. பொலிஸ் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. இதன்படி,...

0

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் கொடுப்பனவை சரியாக வழங்கக் கோரி பணிபகிஷ்கரிப்பில்

நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.2015 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு குறைத்து வழங்கியமைக்கு எதிராக இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்....

0

வடமாகாணசபைக்கெதிராக வடமராட்சியில் கூட்டமைப்பு ஆதரவாளர் ஆர்ப்பாட்டம்!

யாழ் மக்களுக்கு நன்னீர் வழங்கும் முகமாக மத்திய அரசினால் முன்மொழியப்பட்டு மாகாண சபையினால் முன்னெடுக்கப்படும் கடல்நீரினை நன்னீராக்கும் திட்டத்திற்கு எதிராக ஒரு தொகுதி மக்களை திரட்டி ஆர்ப்பாட்டம் ஒன்றினை வடமராட்சி கிழக்கு தமிழ்த்தேசிய கூட்டமைப்பு ஆதரவாளர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். இந்த அடையாள உண்ணாவிரத போராட்டமானது, மருதங்கேணி பிரதேச செயலகத்திற்கு...