Category: கண்டி

0

குடிநீருக்காக ஆர்ப்பாட்டம்..!

கண்டி அனுரகம பிரதேச மக்கள் சுத்தமான குடிநீரை தமக்கு வழங்குமாறு கோரி, கண்டி பதுளை பிரதான வீதியின் அனுரகம பகுதியில் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டம் காரணமாக கண்டி பதுளை பிரதான வீதியின் போக்குவரத்து முற்றாக பாதிக்கப்பட்டது. அனுரகம பகுதியில் பொதுவாகவே நீர் தட்டுப்பாடு காணப்படுகின்றது. தற்போது கடும்...

0

முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக பொகவந்தலாவையில் பாரிய ஆர்ப்பாட்டம்

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நியாயமான சம்பளத்தினை வழங்குமாறு கோரி முதலாளிமார் சம்மேளனத்திற்கு எதிராக இன்று காலை முதல் பொகவந்தலாவ ஹட்டன் பிரதான வீதியினை வழி மறித்து பொகவந்தலாவ பிரதேச மக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பெருந்தோட்ட தொழிலாளர்களின் கூட்டு ஒப்பந்தம் நிறைவடைந்து இரண்டு வருடங்கள் முடிவடையும் தருவாயில் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கான சம்பளத்தினை...

0

இளநீரில் மயக்க மருந்து கலந்து கொடுத்து பணம், நகைகள் அபகரிப்பு!

கம்பளையிலிருந்து புசல்லாவைக்கு செல்வதற்காக கம்பளை பாலமருகே பஸ்ஸுக்காக காத்திருந்தவரை முச்சக்கர வண்டியில் ஏற்றி வந்தவர் அவருக்கு செவ்விளநீரில் மயக்கமருந்து கலந்து பருகக் கொடுத்து பணம், தங்க மோதிரம் என்பன சூறையாடப்பட்ட சம்பவமொன்று கடந்த செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது. இச்சம்பவம் தொடர்பாக இளம் குடும்பஸ்தர் தெரிவிக்கையில், சித்திரை புதுவருடத்தை கொண்டாடுவதற்காக...

0

இரு வெளிநாட்டு பெண்களை வல்லுறவிற்குட்படுத்திய முச்சக்கர வண்டிசாரதி

இலங்கையில் தாதிப் பயிற்சி பெறும் இரண்டு வெளிநாட்டு யுவதிகளை பாலியல் வல்லுறவிற்குட்படுத்த முயற்சி செய்த முச்சக்கர வண்டிசாரதியொருவரைத் தேடி பொலிஸார் தேடிவருகின்றனர். கண்டி பொலிஸ் நிலையத்தில் வெளிநாட்டு யுவதிகளால் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டையடுத்தே பொலிஸார் குறித்த முச்சக்கர வண்டி சாரதியை தேடி வருகின்றனர். குறித்த பொலிஸ் முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கண்டி...

0

ஹட்டன் மாணவி கொழும்பில் கூட்டு பாலியல்…

கொழும்பு மாளிகாவத்தையில் ஹட்டன் பகுதியை சேர்ந்த பாடசாலை மாணவியொருவர் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த மாணவியின் தாயார் வெளிநாட்டில் இருப்பதால் மாளிகாவத்தையில் வசிக்கும் தனது மூத்த சகோதரியின் வீட்டில் தங்கியிருந்த நிலையில் அவரை பாட்டனார் மற்றும் மைத்துனர் பாலியல் பலாத்காரத்துக்கு உட்படுத்தினர்...

0

மலையகத்தில் 168 எயிட்ஸ் நோயாளர்கள்

பதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் 168 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் இயக்­குநர் வைத்தியர்.சிசிர லிய­னகே தெரி­வித்­துள்ளார். பெருந்­தோட்டப் பகுதிகளில் எயிட்ஸ் நோய் பரவி வரும் அபாயம் அவதானிக்கப்­பட்­டுள்­ளது. இதற்கமைய இது­வ­ரை 168 பேர் பதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா மாவட்டங்­களில்...

0

இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் கைது

நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு டுபாய் நாட்டில் பணிப்புரியம் பெண் ஒருவரிடம் நிதி வசூலித்தார் என கூறப்படும் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் நோட்டன்பிரிட்ஜ் பிரதேசத்தின் இணைப்பாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பெண் டுபாய் நாட்டில்...

0

மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப் பகிர்வு அலகு அவசியம்! வலியுறுத்துகிறது மலையக மக்கள் முன்னணி!!

தேசிய இனப்பிரச்சினைக்குக் கூடிய விரைவில் அரசியல் தீர்வு காணப்படவேண்டும் என்றும், அரசியல் தீர்வு பொறிமுறை உருவாக்கப்படும்போது அதில் மலையக மக்களுக்கும் தனியான அதிகாரப்பகிர்வு அலகு அவசியம் என்றும் சர்வகட்சிக் குழுக் கூட்டத்தில் மலையக மக்கள் முன்னணி வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கை விவகாரம் தொடர்பில் நிறைவேற்றப்பட்ட...

0

கூட்டு ஒப்பந்தமா…? கூத்து ஒப்பந்தமா…?

பெருந்தோட்ட தொழிலாளர்கள் நாட்டின் பொருளாதார மற்றும் அபிவிருத்திக்கு பெரும் சக்தியாக தொடர்ந்திருப்பதோடு, வாக்குப் பலத்தின் மூலம் அரசியலிலும் பலமான சக்தியாக விளங்குகின்றனர். பெருந்தோட்ட கம்பனிகள் இவர்களை வருமானம் ஈட்டிக்கொடுக்கும் சக்தியாகவும், அரசியல்வாதிகள் தங்களை பதவியில் அமர்த்தும் உழைப்பாளர் சக்தியாகவும் மட்டுமே பார்ப்பதோடு இம்மக்கள் கௌரவத்தோடு வாழவும் பிறந்தவர்கள் என்பதை...

0

பத்தனையில் சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறந்து வைப்பு

அட்டன் – நுவரெலியா ஏ-7 பிரதான வீதியின் பத்தனை பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட சுரங்கப்பாதை போக்குவரத்துக்காக திறந்து வைக்கப்பட்டுள்ளது. 22.05.2015 அன்று வெள்ளிக்கிழமை முதல் குறித்த பாதை போக்குவரத்து நடவடிக்கைகளுக்காக திறந்து விடப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. கொழும்பு, பதுளை உடரட்ட ரயில் பாதைக்கு கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள இந்த...