வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலளார்கள் உடன் தமது நாட்டுக்கு வந்து தமது ஊடகப் பணியை ஆரம்பிக்கவும்

SRI_LANKA_-_Funerali_Wickramutanga_jpgஇந்த நாட்டில் புதிய ஜனாதிபதி மைத்திரிபாலவும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் கொண்ட அரசு ஆட்சிக்கு வந்த பின் ஊடகத்துறையினருக்கு தமது பேனாவை அல்லது தொலைக்காட்சி, புகைப்படக் கருவிகளை சுதந்திரமாகவும் பக்க சார்பாகவும் இன்றி எவ்வித பயம் சந்தேகமின்றி மட்டுமல்லாமல் அரச அழுத்தங்கள் இல்லாமல் பாவிப்பதற்கு உரிய இடம் வழங்கப்பட்டுள்ளது.

ஆகவே கடந்த காலங்களில் இந்த நாட்டில் தமது பேனாவை பாவிக்க முடியாது அச்சுறுத்தப்பட்டு தற்பொழுது வெளிநாடுகளில் வாழ்ந்து கொண்டிருக்கும் ஊடகவியலளார்கள் உடன் தமது நாட்டுக்கு வந்து தமது ஊடகப் பணியை ஆரம்பிக்குமாறு அழைப்பு விடுக்கின்றேன் என ஊடக தகவல்துறை அமைச்சர் ஜயந்த கருநாதிலக்க உரையாற்றினார்.

நேற்று இரவு கொழும்பு பல்கழைக்கழகத்தில் ஊடக டிப்ளோமாவை முடித்தவர்கள் இணைந்து “கொழும்பு மீடியா நைட்” இராப்போசன நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கொழும்பு பல்கலைக்கழக உபவேந்தர். ஹிம்புருககே, முன்னாள் பேராசிரியர் ஜே.பி திசாநாயக்க, சிரேஸ்ட ஊடகவியலாளர் எட்வின் ஆரியதாச, பல்கலைக்கழக பேராசிரியர் கமல் வல்கொட இந்த அமைப்பின் செயலாளர் மொஹமட் பாரி மற்றும் அங்கத்தவர்களும் கலந்து கொண்டனர்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அமைசச்ர் தெரிவித்தாவது –

கடந்த காலங்களில் அரச தொலைக்காட்சிகள் பத்திரிகைகள் வானொலிகள் ஒரு பக்க சார்பாகவே நடந்து கொண்டன. முன்னைய ஆட்சியில் உள்ளவர்களது ஊதுகுழலாகவே இந்த அரச ஊடக நிறுவணங்களை பாவித்து வந்துள்ளனர். ஆனால் தற்பொழுது இந்த புதிய அரசு ஆட்சிக்கு வந்தபின் நாளாந்த செய்திகள், அரசியல் விவதாங்கள், பக்கசார்பானதாக இல்லாமல் செயல்படுகின்றது. செய்திகளில் முதலில் நாட்டின் ஜனாதிபதி பிரதமர் செய்திகளை முதல் செய்தியாக இல்லாமல் அதனை பத்திரிகையாசிரியர் முக்கியம் என்று கருதினால் மட்டுமே அதனை பிரச்சார முடியும். அதற்காக எந்த அமைச்சரோ, செயலாளாரோ ஏன் எனது செய்தியை போடவில்லை என தொலைபேசியை எடுத்து கேட்க முடியாது. அப்படி கேட்பதற்கும் அவர்களுக்கு உரிமை இல்லை.

முதல் செய்தி மக்களது பிரச்சினைகள், ஊழல்கள் மக்கள் சொத்துக்கள் அபகரிப்பு அரசியல் அச்சுறுத்தல்கள், போன்ற பிரச்சினைகளுக்கு முன்னுரிமை வழங்கல் வேண்டும். எதிர்கட்சி, அரச கட்சிகளது இரண்டுபகுதியினர்களது வைத்தே தொலைக்காட்சியில் அரசியல் விவதாம் நடத்தப்படுகின்றது. அவர்களது கருத்துக்களும் அரச ஊடகங்களில் சொல்லப்படுகின்றது. இதனையே மக்கள் விரும்புகின்றார்கள் அத்துடன் அந்த ஊடகத்தை நம்புகின்றார்கள். . அவ்வாறு செயற்படுவதற்கு ஊடக அமைச்சர் என்ற வகையில் நான் உரிய சுதந்திரம் வழங்கியுள்ளேன்.

கொழும்பு பல்கலை;கழககத்தில் 3 மொழிகளிலும் டிப்ளோமா முடித்தவர்கள் 3000 பேர் உள்ளனர். அதில் இச் சங்கத்தில் 2000 பேர் உள்ளனர். உங்களது சான்றிதளுக்கு ஊடக அமைச்சு முன்னுரிமை வழங்கும் அத்துடன் டிப்ளோமா முடித்தவர்கள் உயர்தர டிப்ளோம மற்றும் பட்டப்படிப்புக்கு செல்வதற்கு பல்கழைக்கழகம் வசதி செய்ய உள்ளதாக அறிகிறேன். நிச்சயம் எனது அமைச்சின் கீழ்; உள்ள நிறுவனங்கள் தங்களது சான்றிதழ் வைத்துள்ளவர்களை ஒரு ஊடகவியலாளர்களாக முன்னுரிமை வழங்கும். எனவும் அமைச்சர் ஜயந்த கருநாதிலக்க தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.