சவப்பெட்டியாவது வந்துகிடைக்கும் என எண்ணிய உறவினர்களுக்கு13 வருடங்களுக்குப்பின் கிடைத்த தமயந்தி

thamayanthi-aஅனுராதபுரம் இப்ளோகமவில் இருந்து பணிப்பெண்னாகச் சவுதிஅரேபியா றியாத்நாட்டுக்குச் சென்றதமயந்தி வயது (47) என்றபெண் சென்றஉடனேயே எவ்வித தகவலும் இல்லாமல் இருந்தார்.

பின்னர் 13 வருடத்திற்குப் பின் இன்று கொழும்பு வந்துதமதுகுடும்பத்துடன் இணைந்துகொண்டார்.

றியாத்தில் உள்ள வெளிநாட்டு வேலைவாய்ப்பு அதிகாரிகள் அப் பணிப் பெண்னைகடந்த 13 வருடங்கள் தேடி கடந்த மாதமேஅவரைகண்டு பிடித்துள்ளனர்.

அவர் வாழ்ந்தவீட்டைஅனுகி அவரைவெளியில் எடுத்துள்ளனர்

அப் பெண் தான் வெளிநாடுசெல்லும்போதுவிட்டுச் சென்ற 1 வயதுகுழந்தையை இன்று 13 வருடத்திற்குப்பின் கட்டியணைத்தார்.;

அவர் வெளிநாடுசெல்லும்போது 5 குழந்தைகள் இருந்தன. அவற்றில் 2 பெண்கள்அவர்களும் திருமணம் முடித்துள்ளனர்.

வறுமையினால் இப் பெண்களும் தத்தமது குழந்தைகளை விட்டுவிட்டுவெளிநாடு சென்றுள்ளதாக அப் பெண் தெரிவித்தார்.

இன்று பத்தர முல்லையில் உள்ள வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் தலத்தா அத்துக்கோரல தலைமையில் இந் நிகழ்வு நடைபெற்றது.

இப் பெண் றியாத்தில் வேலை செய்தமைக்காக 21 இலட்சம் ரூபாவுக்கான காசோலையையும் அமைச்சர் தலத்தா அத்துக்கோரல வழங்கி வைத்தார் தனக்கென ஒருவீட்டை நிர்மாணிக்கவும.; கணவருக்கும் தொழியின்மையினாலும் எனது 5 குழந்தைகளையும் வளர்ப்பதற்கும் வழியின்றியே வறுமையினால் தான் வெளிநாடுசென்றதாகக் கூறினார்.

அத்துடன் தான்வெளிநாடுசெல்லும்போதுஎனக்கு 1, 3, 6, 8,10 வயதில் 5குழந்தைகள் இருந்தன அவர்களை எனது தங்கையிடம் ஒப்படைத்துவிட்டும் தான் வெளிநாடுசென்றதாக அப் பெண் தெரிவித்தார்;.

அவரதுதங்கைகருத்து தெரிவிக்கையில் – நாங்கள் இந்தநாட்டில் உள்ள சகல கோவிலகள் பண்சலைகள் பள்ளிவாசலுக்கெல்லாம் சென்று சகலதேவலாயங்கள், சென்றுஎனதுதங்கை மீண்டும் கிடைக்க பெற பூஜைகள் செய்துவந்தோம். அல்லது அவரது சவப்பெட்டியாவது வந்துகிடைக்கும் என பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள்.

நாங்கள் கடந்த 12 வருடமாக வெளிநாட்டு வேலைவாய்ப்புபணியகத்திற்குவந்து முறைப்பாடு செய்வதும் அவரை தேடுவதுமாகவே இருந்துவந்தோம்

அந்தமுறைப்பாட்டின் காரணமாகவே 13 வருடத்திற்குப் பிறகு இவர் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். இவரைஅராபிய எஜாமானி துன்புறுத்தியுள்ளார்.

அவருக்குஉடைஉணவு, துணிதொலைத்தொடர்பு ஒன்றுமேவழங்காமல் அவரிடமிருந்து வேலை வாங்கியுள்ளர். அவருக்குஒருசதமும் கூட வழங்கவில்லை. இவர் முதலில் சிரியாநாட்டுக்கு கொண்டுசென்று அங்கிருந்துஅவர் எடுத்துவரப்பட்டு இந்தவீட்டில் விடப்பட்டுள்ளார்.

ஆனால் இவரதுஎந்தவொரு முகவரும் அந்தநாட்டில் இல்லாமையால் இவரை ஒருஅடிமைப் பெண்னாக வைத்துஅந்தஅரபு எஜாமானி நடாத்தியுள்ளார்.

றியாத்தில் உள்ள தூதுவராயத்தின் வெளிநாட்டுவேலை வாய்ப்புசேப் ஹவுசின் அதிகாரிகள் 13 வருடத்தின் பின் என்னைதேடிவந்துதூது வரலயத்தின் சேப் ஹவுசில் வைக்கப்பட்டுகடந்த 1 வருடமாகசவுதி எஜமானியிடம் வழக்குத் தொடர்ந்தார்கள்.

இந்தவெளிநாட்டுவேலைவாய்ப்புபணியகத்தின் அதிகாரிகள் தமதுகடமைகளைச் சரிவரச் செய்துஎனது தங்கையைஉயிரோடாவது தேடித் தந்துள்ளார்கள்.

அதுமட்டுமல்லஅமைச்சருக்கும் வேலைவாய்ப்பு அதிகாரிகளும் எங்களுக்கு 21 இலட்சம் ருபா பெற்றுத் தந்தமைக்கும் நாம் நன்றி கூறுகின்றோம்.ஏன அப் பெண்னின் சகோதரி கூறினார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.