மத்தியஸ்தம் வகிக்க இந்தியா பொருத்தமில்லாத நாடு: தயான்

Screen Shot 2015-03-13 at 08.48.37இலங்கையின் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் செய்வதற்கு இந்தியா பொருத்தமில்லாத நாடு என ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் முன்னாள் பிரதிநிதி கலாநிதி தயான் ஜயதிலக்க கூறியுள்ளார்.

ஒரு மாநிலமான தமிழ்நாட்டின் உணர்வோடு இந்தியா சம்பந்தப்பட்டுள்ளதாலும், தேர்தல்களில் இலங்கை பிரச்சினை பெரிதும் செல்வாக்கு செலுத்துவதாலும் இந்தியாவுக்கு இந்த தகுதி இல்லையென அவர் கூறியுள்ளார்.

இலங்கை போரில் இந்திய அமைதிப்படை கொடூரமாக செத்துக்கொண்டிருந்த போதுகூட சென்னையின் அழுத்தம் காரணமாக புலிகளை முழுமையாக அழிக்க இந்திய அரசாங்கம் முயலவில்லை என ஜயதிலக்க மேலும் கூறியுள்ளார்.

இனப்பிரச்சினையில் இந்தியாவின் தலையீட்டுக்கு மீண்டும் கதவைத் திறந்துள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இந்தியப் பக்க சாய்வை கண்டித்துள்ள ஜயதிலக்க, இந்தியாவிடம், தங்கியிருப்பதனால் தமிழ் பிரிவினை வாதத்திலிருந்தும் தனிநாட்டு கோரிக்கையிலிருந்தும் இலங்கையை காப்பாற்ற முடியாதென கூறினார்.

இந்த வகையில், தேர்தல் முக்கியத்துவம் உள்ள தமிழ் குடிவரவாளர்களை சந்தோஷப்படுத்த வேண்டியுள்ள சில மேற்கத்தேய நாடுகளும் இனப்பிரச்சினையில் மத்தியஸ்தம் வகிக்க தகுதியில்லாதவை என்றும் அவர் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.