லெபனானுக்கு பணிப்பெண்ணாக சென்றவர் சடலமாக அனுப்பி வைக்கப்பட்டார்

Feetவறுமை காரணமாக மத்திய கிழக்கு நாடுகளுக்குச் சென்று பல்வேறு துன்பங்களை அனுபவித்து வெறும் சடலங்களாக நாடு திரும்பும் இலங்கை பணிப்பெண்களின் நிலை தொடர் கதையாகவிட்டது.

இரண்டு பிள்ளைகளின் தாயான 33 வயதுடைய ரனித மலர் – சவுதியில் இருந்து சடலமாக இலங்கைக்கு கொண்டு வரப்பட்டு முழுமையாக 14 நாட்கள் கூட கடக்கவில்லை.

இந்த நிலையில், கண்டி – பன்வில – மடுல்கம – ரிச்ரன்ட் தோட்டத்தில் வசித்த சகுந்தலா என்ற பெண்ணின் சடலம் தற்போது நாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

குடும்ப வறுமை, பிள்ளைகளின் எதிர்காலம் என்பவற்றைக் கருத்திற்கொண்டு 47 வயதான சகுந்தலா கடந்த வருடம் லெபனானுக்கு வீ்ட்டுப் பணிப்பெண்ணாக சென்றுள்ளார்.

மூன்று பிள்ளைகளின் தாயான இவர் லெபனானுக்கு சென்று மூன்று மாதங்களின் பின்னரே 28 ஆயிரம் ரூபாவை வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

நாட்கள் செல்ல செல்ல தொலைபேசி அழைப்புகள் இல்லாத நிலையில், நான்கு மாதங்களின் பின்னர் ஒரு முறை அழைப்பை ஏற்படுத்தி தொடர்ந்தும் அங்கு பணிபுரிய முடியாது என்றும் 5 மாதத்திற்குள் நாடு திரும்புவதாகவும் குடும்பத்தாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் திடீரென சகுந்தலா லெபனானில் விபத்திற்குள்ளாகி கால்களை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் மறுநாள் அவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டதாகவும் உறவினர்கள் தெரிவித்தனர் .

தற்போது சடலமாக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்ட சகுந்தலாவைப் போன்று எத்தனையோ பெண்கள் மத்திய கிழக்கு நாடுகளில் பல்வேறு வகையான இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.