
பிஜி தீவின் மேன்முறையீட்டு நிதீமன்ற நீதிபதியாக இலங்கை நீதிபதியொருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிஜி மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் இலங்கையைச் சேர்ந்த 10ஆவது நீதிபதியாவார். வனகுவத்தவதுகே ஜூட் ஷவின்ர பெர்ணான்டோ என்பவரே இலங்கையைச் சேர்ந்த 10ஆவது நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர் பிஜி ஜனாதிபதி ராட்டி எபலி நெய்லாட்டிகோ முன்னிலையில் சத்தியபிரமாணம் செய்துகொண்டுள்ளார்.
1987ஆம் ஆண்டு, இலங்கை சட்டதரணிகள் சங்கத்தின் அங்கத்தவராக இருந்த இவர், 1998ஆம் ஆண்டு இலங்கை கடற்படையிலும் கடமையாற்றியுள்ளார்.