
புங்குடுதீவு மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றஞ்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள சுவிஸ் குமார் எனப்படும் மகாலிங்கம் சிவகுமார் தமது நாட்டு பிரஜை இல்லையென கொழும்பிலுள்ள சுவிஸ் தூதவராலயம் அறிவித்துள்ளது.
இன்று தூதுவாலயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் குறித்த நபர் இலங்கை பிரஜையே எனவும் எனினும் சுவிஸில் வதிவிட அனுமதி பெற்றுக கொண்டுள்ளவரெனவும் அச்செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாணவி சிவலோகநாதன் வித்தியாவின் படுகொலையினை வன்மையாக கண்டித்து சுவிஸ் அரசு பக்கச்சார்பற்ற விசாரணைகளை வலியுறுத்தி உள்ளதுடன் குற்றவாளிகளை சட்டத்தின் முன்னிறுத்தப்பட வேண்டுமெனவும் கேட்டுக்கொண்டுள்ளது.
அதே வேளை கொலை குற்றம் சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபரொருவர் சுவிஸ் பிரஜை என தெரிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தப்பட்ட விசாரணைகளில் அது தவறான தகவல் என கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவர் சுவிஸில் வதிவிட அனுமதி பெற்றுக் கொண்டுள்ள ஒருவரேயெனவும் அச்செய்தி குறிப்பினில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.