வீசா இன்றி இந்தியா செல்ல முடியாது – இந்திய துணைத்தூதுவர்

40fc7a1b45b2546e777efd9d9f00fb81இலங்கையில் இருந்து இந்தியாவிற்கு செல்லவுள்ளவர்கள் வீசாவினைப் பெற்றே விமானநிலையத்தினூடாக செல்ல முடியும் என யாழ்.

இந்திய துணைத்தூதுவர் நடராஜன் உதயன் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.

இலங்கையில் இருந்து இந்தியா செல்வதற்கு வீசா பெற்றுச் செல்லும் முறைமை தொடர்ந்து வரும் நிலையில் அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ஈ.வீசா ( இணைய வீசா) வினால் மக்கள் மத்தியில் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது.

பலர் ஈ.வீசா என்றால் வீசா இல்லாது இந்தியாவுக்குச் செல்ல முடியும் என நம்பி பயனச்சீட்டை பெற்று விமானநிலையத்திற்குச் சென்று ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர்.

இது தொடர்பில் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகத்தை தீர்க்கும் வகையில் யாழ். இந்திய துணைத்தூதுவர் நடராஜன் அவர்களிடம் எமது செய்திப்பிரிவு கேட்டபோது மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.