கலாச்சார மையத்திற்கான வேலைகள் இவ்வருட இறுதிக்குள் ஆரம்பம் – இந்திய துணைத்தூதுவர்

download (1)இந்திய அரசாங்கத்தினால் யாழ்ப்பாணத்தில் அமைக்கப்படவுள்ள கலாச்சார மையத்திற்கான கட்டட வேலைகள் இந்த ஆண்டு இறுதிக்குள் ஆரம்பிக்கப்படும் என யாழ்ப்பாணம் இந்திய தூதரகத்தின் தூதுவர் நடராஜன் தெரிவித்தார்.

இந்திய அரசின் நிதி உதவியில் யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு யாழிற்கு விஜயம் மேற்கொண்டிருந்த இந்திய பிரதமர் நரேந்திர மோடி அவர்களினால் அடிக்கல் நாட்டப்பட்டது.

அதுதொடர்பில் கேட்டிருந்தபோதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், யாழ்ப்பாணத்தில் கலாச்சார மையம் ஒன்றினை அமைப்பதற்கு இந்திய அரசும் இலங்கை அரசும் இணக்கம் கண்டிருந்தன.

இதனையடுத்து யாழ். பொதுநாலகத்திற்கு அருகில் உலகத்தரம் வாய்ந்த கலாச்சார மையத்தினை அமைப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இந்திய பிரதமர் யாழ். விஜயத்தின் போது அடிக்கல்லினையும் நாட்டிவைத்தார்.

தற்போது கட்டடத்தை அமைப்பதற்கான பூர்வாங்க வேலைகள் நடைபெற்று முடியும் தறுவாயில் உள்ளன. எனவே இந்த வருடம் இறுதிக்குள் கட்டட வேலைகள் ஆரம்பிக்கப்படும். மேலும் துரையப்பா விளையாட்டு அரங்க திருத்த வேலைகளும் இவ்வருடத்திற்குள் பூர்த்தியாகும் என்றும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.