துன்னாலை இராமச்சந்திரன் மாயம் எமக்கு எந்த சம்பந்தமும் இல்லை உண்மையை அறிய டக்ளஸ் கோரிக்கை

Douglas1_0தனது புதல்வர் காணாமற்போனதற்கும் ஈ.பி.டி.பி.யினருக்கும் இடையில் தொடர்பு இருப்பதாக, அண்மையில் இணைய தளமொன்றில் துன்னாலை கிழக்கு, கரவெட்டியைச் சேர்ந்த ஒரு தம்பதியினர் கூறியிருந்தனர்.

இக் கருத்துக்கள் எவராலும் தூண்டப்பட்ட நிலையில் எமக்கு எதிராக முன்வைக்கப்பட்ட கருத்துக்களா அல்லது அறியாமை காரணமாக முன்வைக்கப்பட்ட கருத்துக்களா என்பது எமக்குத் தெரியாது. எனினும், இக்கருத்துக்களில் எவ்வித உண்மையும் கிடையாது.

எனவே இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உண்மையைக் கண்டறிய உதவுமாறு செயலாளர் நாயகம் டக்ளஸ் தேவானந்தா, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடமும், இராணுவத் தளபதியிடமும் எழுத்துமூலக் கோரிக்கை விடுத்துள்ளார்.

அதில் துன்னாலை கிழக்கு, கரவெட்டி எனும் விலாசத்தைச் சேர்ந்த செல்லையா சுப்பிரமணி யம் மற்றும் திருமதி அம்பிகை சுப்பிரமணியம் ஆகியோர் கடந்த 2015..04.18 ஆம் திகதி ”தேசம்” இணையத்தளத்தில் தெரிவித்திருந்த கருத்துக்களின்படி, இவர்க ளது புதல்வரான எஸ்.இராமச்சந்திரன் என்பவர் கடந்த 2007.03.15 ஆம் திகதி கலிகச் சந்திப் பகுதியில் வைத்து பிற்பகல் 6.00 மணியளவில் இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு, இராணுவ முகாமிற்கு கொண்டுசெல்லப்பட்டதாகவும், அங்கு இருந்த ஈ.பி.டி.பி.யினரிடம் இவர்களது புதல்வர் ஒப்படைக்கப்படுவதை பாதையில் இருந்த மக்கள் கண்டதாகவும், அப்போது ஊரடங்குச் சட்டம் அமுலில் இருந்ததாகவும் தெரிவித்துள்ளனர்.

பின்னர், இரவு 8.00 மணியளவில் இவர்கள் தொலைபேசி யில் தொடர்பு கொண்டபோது, தான் முகாமில் இருப்பதாகவும், பிரச்சினை எதுவுமில்லை எனக் கூறியதாகவும், பின்னர் அவர் வீடு திரும்பாததால் மறுநாள் குறித்த இராணுவ முகாமிற்குச் சென்று பார்த்தபோது, அவர் அங்கு இருக்கவில்லை என்றும் தெரிவித்து, இவர்களது புதல்வரைக் கடத்தியது ஈ.பி.டி.பி.யினரே என்று முறைப்பட்டுள்ளனர்.

எஸ்.இராமச்சந்திரன் கடத்தப் பட்டபோது கையடக்கத் தொலைபேசி, கமரா, தங்கச் சங்கிலி, கடிகாரம் மற்றும் 60,000 ரூபா பணம் என்பன அவர் வசம் இருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

இப்படி ஒரு சம்பவம் இடம்பெற்றமை தொடர்பில் நாம் இது வரையில் அறிந்திருக்கவில்லை என்பதுடன், எமக்கு இதில் எவ்வித சம்பந்தமும் இல்லை என்பதை தங்களுக்கு அறியத்தருகின்றோம்.

எனவே இவ்விடயம் தொடர்பில் ஆராய்ந்து, உரிய நடவ டிக்கை எடுத்து, இதன் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துமாறு தங்களிடம் தயவுடன் கேட்டுக் கொள்கின்றேன்.

இவ்விடயம் தொடர்பில் தாங்கள் வழங்கும் ஒத்துழைப்பை நான் பெரிதும் மதிக்கின்றேன் என்று அந்த எழுத்துமூலக் கோரிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.