இந்திய மீனவர்களை விடுவிப்போம்; படகுகளை விடுவிக்கமாட்டோம்

mahintha amaraweeraஇந்­திய மீன­வர்­களை விடு­தலை செய்வோம். ஆனால் கைப்­பற்­றப்­பட்ட பட­கு­க­ளையும், வலை­களையும் விடு­விக்க மாட்டோம் எனத் தெரி­வித்த கடற்றொழில் நீரியல் வளத்­துறை அமைச்சர் மஹிந்த அம­ர­வீர, மீன் ஏற்­று­ம­திக்கு விதிக்­கப்­பட்­டி­ருக்கும் ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் தடை விரைவில் நீங்கும். அதற்­கான அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் அமைச்சு முன்­னெ­டுத்து வரு­கின்­றது என்றும் தெரி­வித்தார்.

கடற்­றொழில் நீரியல் வளத்­துறை அமைச்­ச­ராக பத­வி­யேற்ற மஹிந்த அம­ர­வீர நேற்று செவ்­வாய்க்­கி­ழமை மாளி­கா­வத்­தை­யி­லு ள்ள அமைச்சின் அலு­வ­ல­கத்தில் பதவிப் பொறுப்­புக்­களை ஏற்றுக் கொண்ட பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே இவ்­வாறு தெரி­வித்தார்.

அமைச்சர் இங்கு மேலும் கருத்து தெரி­விக்­கையில்,

இந்­திய மீன­வர்கள் பிரச்­சினை தொடர்­பாக தமிழ்­நாடு மாநில அர­சுடன் பேசு­வதால் பல­னில்லை. எனவே ராஜ­தந்­திர ரீதியில் இந்­திய மத்­திய அர­சுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்தி வரு­கின்றோம்.

இங்­குள்ள இந்­திய உயர்ஸ்­தா­னி­க­ரா­லயம் இப் பேச்­சு­வார்த்­தை­க­ளுக்கு பெரும் பங்­க­ளிப்பை வழங்­கு­கின்­றது.எனவே, இப்­பி­ரச்­சி­னைக்கு விரைவில் தீர்வு காணப்­படும். சென்­னையில் பட­குகள் உரி­மை­யா­ளர்­க­ளாக அர­சியல் வாதி­களே உள்­ளனர். இவர்கள் தான் மீன­வர்­களை தூண்­டி­விட்டு எமக்­கெ­தி­ராக அங்கு போராட்­டங்­களை நடத்­து­கின்­றனர்.

இலங்கை கடற்­ப­ரப்பில் அத்­து­மீறி மீன்­பி­டிக்கும் இந்­திய மீன­வர்­களை வெளி­யேற்ற நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு கடற்­ப­டை­யி­ன­ருக்கு ஆலோ­ச­னைகள் வழங்­கி­யுள்ளோம்.
தற்­போது 16 இந்­திய மீன­வர்­களே கைது செய்­யப்­பட்­டுள்­ளனர். இவர்கள் அனை­வ­ரையும் விடு­தலை செய்வோம்.

ஆனால், கைப்­பற்­றப்­பட்ட பட­கு­களை, வலை­களை விடு­விக்க மாட்டோம். இலங்­கை­யி­லி­ருந்து ஐரோப்­பிய ஒன்­றி­யத்­திற்கு மீன் ஏற்­று­மதி தடை­செய்­யப்­பட்­டது. இதனை நீக்­கு­வ­தற்­காக அமைச்சு அனைத்து நட­வ­டிக்­கை­க­ளையும் பூர்த்தி செய்­துள்­ளது.

ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் பரிந்­துரைகள் நிறை­வேற்­றப்­பட்­டுள்­ளன. விரைவில் இத்­தடை நீங்கி மீன் ஏற்­று­ம­தியை ஆரம்­பிக்க முடியும். எமது நாட்டை சுற்றி கடல் வளம் உள்­ளது. ஆனால் எமது நாட்­டுக்கு தேவை­யான அளவு மீன் கிடைப்­ப­தில்லை.

வெளி­நாட்­டி­லி­ருந்து மக்கள் தேவைக்­கான மீன் இறக்­கு­மதி செய்­யப்­ப­டு­கின்­றது. இந்­நி­லை­மையை மாற்­று­வ­தற்கு நவீன தொழில் நுட்­பங்கள், பட­கு­களின் வச­திகள் ஏற்­ப­டுத்திக் கொடுக்­கப்­பட்டு சர்­வ­தேச கடலில் மீன்பிடிக்கும் நிலைமையை உருவாக்குவோம்.அது மட்டுமல்லாது எமது நாட்டு மீன்களுக்கு வெளிநாடுகளில் சந்தை வாய்ப்பு உள்ளது. அதனை மேம்படுத்துவோம் என்றார்.உள்ளக நீர் நிலைகளில் மீன் வளங்களை அபிவிருத்தி செய்வோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.