எக்னெலிகொட கடத்தல் தொடர்பான விசாரணையை தடுக்கவில்லை! இராணுவம் மறுப்பு

images-23ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட காணாமல் போன சம்பவம் தொடர்பான விசாரணைகளை தடுக்க முயற்சிப்பதாக வெளியாகும் செய்தியினை இராணுவம் நிராகரித்துள்ளது.
சில ஊடகங்களில் எக்னெலிகொட தொடர்பான விசாரணைகளையும், கிரித்தல பகுதியில் அமைந்துள்ள இராணுவ முகாம் தொடர்பிலான விசாரணைகளையும் இராணுவம் தடுக்க முயற்சிப்பதாக வெளியாகிய செய்திகள் உண்மையில்லை என இராணுவ ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கிரித்தல முகாமினை பார்வையிடுவதற்கு அனுமதிக்க முடியாதெ என இராணுவத்தின் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் நீதிமன்றில் தெரிவித்திருந்தனர் என குறிப்பிடப்படுகிறது.

பொலிஸார் சந்தேகத்தின் பேரில் இராணுவத்தினரை கைது செய்தால் அந்த விவகாரங்களில் இராணுவ சட்டத்தரணிகள் நீதிமன்றில் ஆஜராக மாட்டார்கள் என தெரிவிக்கப்படுகிறது.

எனவே இராணுவத்தினர் சார்பில் எக்னெலிகொட வழக்கில் இராணுவ சட்டத்தரணிகள் எவரும் ஆஜராகவில்லை என இராணுவ ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.