இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின் ரூபா 600 மில்லியன் கையாடல்: கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குப் பதிவு

is-2இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்துக்குச் சொந்தமான ரூபா 600 மில்லியன் பெறுமதியான பணத்தினைக் கையாடியுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்கவுக்கும்,ரெலிக்கொம் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அனுஷா பில்பிற்றவுக்கும் எதிராக சட்டமா அதிபரினால் கொழும்பு மேல் நீதி மன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரியவருவதாவது;
முன்னாள் ஜனாதிபதியின் செயலாளர் லலித் வீரதுங்க இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்தின் தலைவராவார் . ரெலிக்கொம் நிறுவனத்தின் செயலாளர் நாயகம் அனுஷா பில்பிற்ற ஆகிய இருவரும் இணைந்து ஸ்ரீ லங்கா ரெலிக்கொம் நிறுவனத்துக்குச் சொந்தமான ரூபா 600 மில்லியன் பெறுமதியான பணத்தினைக் கையாடியுள்ளதாக் குற்றஞ்சாட்டப்பட்டு நேற்று கொழும்பு மேல் நீதிமன்றில் வழக்குத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி உசலா சரோஜினி வீரவாதனா இந்த வழக்கை ஏற்பதாகவும் இதுதொடர்பான ஆரம்ப அறிக்கையினை எதிர்வரும் 18ம் திகதி சமர்ப்பிக்குமாறும் உத்தரவிட்டுள்ளார்.
அதுமட்டுமன்றி வழக்குத் தொடர்பான இதர சான்றிதழ் ஏதும் இருக்குமாயின் அவற்றையும் எதிர்வரும் 18ம் திகதி சமர்ப்பிக்கமாறு மேல் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
மேலும் இலங்கை தொலைத்தொடர்பு கட்டுப்பாட்டு ஆணையத்தினால் கடந்த 30.08.2014தொடக்கம் 05.01.2015 வரையான காலப்பகுதிக்கான மீளாய்வு இடம்பெற்றபோதே இந்த ஊழல் தொடர்பாக தெரியவந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இதுமட்டுமன்றி இலங்கை வங்கியின் தப்பிரவோன் கிளையில் லலித் வீரதுங்கவின் கணக்கில் 7040016 இத்தொகை மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இது ஸ்ரீலங்கா ரெலிக்கொம் கட்டுப்பாட்டு ஆணையத்தின் சட்டம் 250 – 1991 இற்கு முரணானது எனவும் இதனை அவர்கள் விசாரணை செய்து விடயத்தை மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.