உ .பி.,யில் சட்டம்ஒழுங்கு மோசம்; பா.ஜ.,தொண்டர்கள் மீது தடியடி

லக்னோ: உத்திரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து காணப்படுவதாக அகிலேஷ் அரசுக்கு எதிராக போராட்டம் நடத்திய பா.ஜ., தொண்டர்கள்மீது போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர். தொடர்ந்து போலீசார், தொண்டர்கள் இடையே கடும் மோதல் ஏற்பட்டது. உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் அகிலேஷ் பொறுப்பேற்றது முதல் பல வன்முறை செயல்கள் நடந்து வருகிறது. குறிப்பாக கற்பழிப்பு, கொலை, இருபிரிவினர் மோதல் என நாள்தோறும் கொடூரமாக நடந்து வருகிறது. சமீபத்தில் பா.ஜ., பிரமுகர்கள் குறி வைத்து கொலை செய்யப்பட்டு வருகின்றனர். மின்சார தட்டுப்பாடு காரணமாக மாநில வளர்ச்சி பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.

கொலையாளிகள் இதுவரை கைது செய்யப்படவில்லை என்றும், சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து விட்டதை சுட்டிக்காட்டும் விதமாகவும் பா.ஜ., இளைஞர் படையினர் இன்று லக்னோவில் பேரணி மற்றும் ஆர்ப்பாட்டம் நடத்தினர். சட்டசபை அலுவலகம் நோக்கி சென்று பா.ஜ.,வினர் முற்றுகையிட முயற்சித்தனர். இந்நேரத்தில் போலீசார், தொண்டர்கள் இடையே மோதல் ஏற்பட்டது. தொடர்ந்து போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசினர். தண்ணீர் பீய்ச்சி தொண்டர்களை விரட்டினர். மேலும் தடியடியும் நடத்தப்பட்டது. இதனையடுத்து லக்னோவில் பதட்டம் ஏற்பட்டது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.