இந்திய மீனவர்கள் அத்துமீறல் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல்

Screen Shot 2015-09-04 at 13.20.51இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீறல் நட­வ­டிக்­கை­யா­னது இலங்­கையின் தேசிய பாது­காப்­புக்கு அச்­சு­றுத்­த­லாக அமைந்­துள்­ளது. எனவே, கடற்­ப­டையின் பலத்தை அதி­க­ரிப்­ப­தற்கும் கடற்­பா­து­காப்­பினை விஸ்­த­ரிப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­பட வேண்டும் என்று ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் அம்­பாந்­தோட்டை மாவட்ட பாரா­ளு­மன்றஉறுப்­பினர் நாமல் ராஜபக் ஷ தெரி­வித்தார்.
பாரா­ளு­மன்­றத்தில் நேற்று வெள்­ளிக்­கி­ழமை ஜே.வி.பி.யின் விஜித ஹேரத் எம்.பி.யினால் கொண்­டு­வ­ரப்­பட்ட இந்­திய மீன­வர்­களின் அத்­து­மீ­றலால் ஏற்­படும் பிரச்­சி­னைகள் தொடர்­பான சபை ஒத்­தி­வைப்பு வேளைப் பிரே­ரணை மீதான விவா­தத்தில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
நாமல் ராஜபக் ஷ எம்.பி. இங்கு மேலும் கூறு­கையில்,
எல்.ரி.ரி.ஈ. பயங்­க­ர­வா­தத்தின் மூல­மாக எமது நாட்டு மீனவர் கடந்த 30 வருடங்களாக பாதிப்­பி­னையும் அச்­சு­றுத்­த­லையும் எதிர் கொண்­டி­ருந்­தனர். அத்­த­கைய யுத்தம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் இன்று இந்­திய மீன­வர்­களால் எமது மீன­வர்கள் பாதிக்­கப்­பட்­டுள்­ளார்கள். அச்­சு­றுத்­தல்­க­ளுக்கும் முகம் கொடுத்து வரு­கின்­றனர்.
மேலும் அத்­து­மீறி எமது கடற்­ப­ரப்­புக்குள் நுழையும் மீன­வர்கள் சட்ட விரோத செயற்­பா­டு­க­ளிலும் ஈடு­ப­ட­மு­டியும். இந்­திய மீன­வர்கள் எமது மீன­வர்­களின் வலை­களை நாசம் செய்து மீன் வளங்­க­ளையும் சூறை­யாடிச் செல்­கின்­றனர்.
இவ்­வாறு அத்­து­மீறி மீன்­பி­டியில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் இருக்குமாக இருப்பின் அது தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுக்கவேண்டும். என்றார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.