இலங்கையில் (திருகோணமலை) வாழும் காப்பிரியர்கள்

download-31பல்லினக் கலாசாரம் கொண்டதே இவ்வுலகமாகும். இவ்வுலகத்திலுள்ள அனைத்து நாடுகளின் சரித்திரங்களும், அந்தந்த நாட்டின் இனங்களுக்கிடையே தொன்று தொட்டுக் காணப்பட்டு வருகின்ற கலாசாரங்களின் பின்னணியாகும். இவ்வாறான பின்னணியே ஒவ்வொரு நாட்டிலும் வாழ்கின்ற சமூகங்களுக்கிடையே நிலவி வருகின்ற பழக்கவழக்கங்கள், பண்பாடுகள், வாழ்க்கை நடைமுறைகள், தெய்வ நம்பிக்கைகள், ஒழுக்கக் கோட்பாடுகள் என்பவற்றோடு ஒவ்வொரு தனிமனித வாழ்க்கையின் சிந்தனையோடும் ஒரு சமூக அமைப்பாக மக்கள் குழாம் சிறந்ததொரு நாட்டை உருவாக்கும் திறனை அடைந்துள்ளனர். இவ்வாறான ஒரு சமூகம் ஓர் இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு நகர்வதென்பது ஒரு சமூகத்தின் துர்பாக்கியநிலை என்றே கருதலாம்.

எமது இலங்கைத் திருநாட்டில் பல்லினக் கலாசார வருகை மிக வேகமாக இருந்துள்ளது என்பதற்கு எமது நாட்டில் காணப்பட்டு வருகின்ற இருபது வகை சமூகங்களை உதாரணமாகக் கூறலாம். இலங்கைத் திருநாட்டின் வரலாற்றுப் பக்கங்களிலும் பல்லினக்கலாசாரம் வேரூன்றிக் காணப்படுகின்றது என்பதை சான்றுகள் மூலம் அறிய முடிகின்றது. இவ்வாறானதொரு வரலாற்றுப் பின்னணி எமது நாட்டில் தற்போதும் நிலவி வருகின்றது என்பதற்கு இங்கு வசிக்கின்ற முக்கியமான சமூகங்கள் ஆதாரமாக விளங்குகின்றன.

அந்த வகையில், ஆசியாவின் அதிசயம் என்று இலங்கை தம்மை சர்வதேச அளவில் பறைசாற்றிக் கொண்டிருக்கும் வேளையில் இலங்கையில் இலங்கைக்குள்ளேயே சிறுபான்மையிலும் சிறுபான்மையாக இருக்கும் காப்பிரிச் சமூகம் தொடர்பாக உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் பெரிதாக தெரியாமல் இருப்பது ஒரு அதிசயமே.

இக்காப்பிரிச் சமூகமானது பல ஆண்டுகளுக்கு முன் இலங்கை நாட்டுக்கு வந்தபோதிலும் அவர்கள் தம்முடைய கலாசார பண்பாடுகளைத் தாண்டி இலங்கையில் காணப்பட்ட பிரதான சமூகங்களுக்குள் ஊடுருவி தமது வாழ்வை மாற்றிக் கொண்டதால் இவர்களை வேறுபடுத்திப் பார்க்கின்ற நிலை தென்படவில்லை.

அதாவது, எமது நாட்டில் காணப்படுகின்ற தமிழ், சிங்களம், முஸ்லிம், பறங்கி என்ற சமூகத்திடையே தமது கலாசாரங்களை ஊடுருவ விடாவிட்டாலும் கலப்புத் திருமணம், சமூக ஒற்றுமைப்பாடு என்ற ரீதியில் காப்பிரி சமூகம் இலங்கை மக்களின் சமூக சரித்திரங்களைப் பின்பற்றி இணைந்து வாழ்கின்றார்கள் என்பது எமது நாட்டு கலாசார வரலாறுகளில் உரைத்து நிற்கின்ற உண்மையாகும்.
காப்பிரி என்ற சொல்லானது காப்பிரி சமூகத்தின் பூர்வீக கண்டமாகக் கருதப்படுகின்ற தென்னாபிரிக்க, மத்தியாபிரிக்க நிலப்பரப்பின் பழங்குடிகளான ‘பண்டு’ இனத்தை குறிக்கும் பழமையான சொல்லிலிருந்து கருதப்பட்ட சொல் என்றும் இப்பூர்வீக இனமே போர்த்துக்கீசரால் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டு காலனித்துவ இலங்கையின் பல வரலாற்றுப் பக்கங்களை நிரப்பி இன்றைய இலங்கையின் சிறுபான்மைச் சமூகமாகக் காணப்படுகின்ற ஆபிரிக்கர்களாவர். இருந்தபோதும் இக்காப்பிரி என்ற சொல்லுக்கு மற்றொரு விளக்கமும் உள்ளது.

ஆபிரிக்காக் கண்டத்திற்குள் ஐரோப்பியரின் ஊடுருவல் ஆரம்பமாக முன்பே ஆபிரிக்கர்கள் இஸ்லாத்தை தழுவியிருந்ததாகவும், போர்த்துக்கீசரின் கைக்குள் ஆபிரிக்கா சிக்கிக்கொள்ள அவர்களிற் கணிசமானவர்கள் கத்தோலிக்கத்தை ஏற்றிருக்கின்றார்கள். இஸ்லாத்தை நிராகரித்தவர்களைக் குறிக்கும் ‘கபர்’ என்ற அரபுவகைச் சொல் ‘மயககசை’ ஆகி அது தமிழில் காப்பிரியாக வந்திருக்க வேண்டும் என்கிறார்கள் சிலர்.

கி.பி 5ம் நூற்றாண்டில் போர்த்துக்கீசரினால் ஆபிரிக்காவிலிருந்து சிப்பாய்களாக இலங்கைக்குக் கொண்டு வரப்பட்டவர்களாக இக்காப்பிரி சமூகத்தவர்கள் காணப்படுகின்றனர். போர்த்துக்கீச மாலுமிகள் முதற் தொகுதிக் காப்பிரியர்களை அப்போதைய சிலோனுக்கு 1500ம் ஆண்டு கொண்டு வந்தனர். இவர்களில் பெரும்பாலானோர் மொசாம்பிக் நாட்டைச் சேர்ந்தவர்கள். கி.பி 5ம் நுற்றாண்டில் எதியோப்பிய வணிகர்கள் மாதோட்டத் துறைமுகத்தில் வணிகம் செய்திருக்கின்றார்கள்.

அதன் பின்னர் முதன்முறையாக 1631.10.13இல் 100காப்பிரிகள் கோவா துறைமுகம் வழியாக இலங்கைக்குக் கொண்டுவரப் பட்டார்கள் என்பது எழுதப்பட்ட செய்திகள். காப்பிரி மக்கள் அங்கோலாவிலும், மொசாம்பிக்கிலும் ஆபிரிக்கக் கண்டத்தின் வேறு சில பகுதிகளிலிருந்தும் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்கள்.

இவ்வாறு வேலைகளுக்காகக் கொண்டு வரப்பட்டவர்கள் ஆரம்பத்தில் கோட்டைகள் அமைத்தல், கடற்படையின் ஓர் அம்சமாகவும், வீட்டுவேலைகள் செய்தல் மற்றும் படைத் துறையிலும் வேலைக்காக நிர்ப்பந்திக்கப் பட்டார்கள். அத்தோடு, போத்துக்கீசப் படைத்தளபதி ‘னுநைபழ னந ஆநடடழ னந ஊயளவசழ’ 1638.03.27இல் கண்டி மீது படையெடுத்த போது அதில் 300காப்பிரிகள் பங்கேற்றதாக இலங்கை வரலாறு கூறுகின்றது.

இதைத் தொடர்ந்து இலங்கை போத்துக்கீசரிடம் இருந்து டச்சுக் காரர்களின் கையில்விழ காப்பிரிகளும் டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியில் இணைக்கப்பட்டார்கள். டச்சுக் கிழக்கிந்தியக் கம்பனியும் மேலும் ஆபிரிக்க மக்களை இலங்கைக்குள் கொண்டு வந்து சேர்த்தது. 1675-1680 காலப்பகுதியில் டச்சுத்தளபதியாக பணியாற்றிய ‘ஏயn புழநளெ துச’இ இனுடைய காலத்தில் டச்சுப் படையில் இருந்த காப்பிரிகளின் எண்ணிக்கை 4000ஆகக் காணப்பட்டது.
போர்த்துக்கீசர் மற்றும் டச்சுக்காரர்களைத் தொடர்ந்து ஆங்கிலேயருக்கும் அடிமைமோகம் உருவாகியது. இக்காலத்தில் சிலோன் ஆயுதப் படையினருக்கு எதிராக காப்பிரிப்படைப் பிரிவுகளில் போரிடுவதற்காக பிரித்தானியக் குடியேற்ற வாசிகள் ஏனைய காப்பிரிகளை சிலோனுக்குக் கொண்டு வந்தனர். பிரித்தானியாவின் முதலாவது ஆளுனர் ‘குசநனநசiஉம ழேசவா’ என்பவர் ஒருவருக்கு 125 ஸ்பானிய டொலர் என்ற விலைப்படி மொசாம்பிக் அடிமைச் சந்தையில் கறுவாவும் கொஞ்சம் பணமும் கொடுத்து ஒரு பண்டமாற்றுப் பொருள் போல ஆபிரிக்க மக்களை விலைபேசி வாங்கிக் கொண்டார்.

அவரைத் தொடர்ந்து இலங்கை ஆளுனராகப் பதவியேற்ற ‘டீநளவழறநன’ மேலும் பல காப்பிரிகளை இலங்கைக்குக் கொண்டு வந்தார். அத்தோடு போர்த்துக்கீசரின் கோவா அடிமைச் சந்தையில் பணத்திற்கும், பண்டத்திற்கும் காப்பிரி மக்கள் விற்கப்பட்டதால் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கு வேண்டும் போதெல்லாம் கோவாவில் இருந்து காப்பிரிகளை திருகோணமலை வழியாக இலங்கைக்குள் கொண்டு வந்திருக்கிறார்கள்.

1815இல் பிரித்தானிய படைத்தலைவராக இருந்த ‘அல்விஸ் ஜெமாடர்’ தென்னாபிரிக்கச் சந்தையில் இருந்து பெருந்தொகையில் காப்பிரிகளைக் கொண்டுவந்து சேர்த்தார். அதற்குப் பின்னரான காலத்தில் பிரித்தானியப் படையின் 3ம்இ4ம் படைப்பிரிவுகள் முழுமையான கருநிறத்தோடு காப்பிரிகளை மட்டுமே கொண்டதாக அமைக்கப் பட்டிருந்தன. முன்னிருந்த காலங்களைக் காட்டிலும் ‘டீநசவழடயஉஉi’ இனுடைய காலத்திலே 9000இற்கும் அதிகளவான காப்பிரிகள் கொண்டுவரப்பட்டனர். இதைத் தொடர்ந்து 1815-1817 காலப்பகுதியில் பிரித்தானியருக்கு ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறை காரணமாக காப்பிரிகள் இருந்த படையணிகள் கலைக்கப்பட்டன.

இவ்வாட்சிகளைத் தொடர்ந்து இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் ஆபிரிக்காவிலிருந்து கொண்டுவரப்பட்ட காப்பிரி மக்களை திருப்பிக் கொண்டுசெல்ல யாரும் துணியவில்லை. அதனால் அவர்கள் இலங்கையிலேயே இருக்க நேர்ந்தது. இதனால் இம்மக்கள் எதற்காக இலங்கைக்குக் கொண்டுவரப்பட்டார்களோ அதிலிருந்து கைவிடப்பட்டதனால் மீண்டும் சொந்த ஊருக்குச் செல்லாமலும் வேறு எந்தத் தொழிலும் செய்ய முடியாமலும் இவர்கள் தமது வயிற்றுப் பசியைத் தீர்த்துக்கொள்வதற்காக சிறுசிறு வேலைகளைச் செய்து இலங்கையிலேயே திருகோணமலை, புத்தளம், நீர்கொழும்பு, மட்டக்களப்பு, கண்டி உள்ளிட்ட பல இடங்களில் தமது வாழ்க்கையினை தொடர்ந்தார்கள்.

இவ்வாறு கைவிடப்பட்ட அம்மக்கள் கூட்டத்தினர் இன்றைய நிலையில் எனைய சமூகங்களின் பார்வையில் தனியானதொரு அல்லது வேறுப்பட்ட பார்வையினூடாகவே பார்க்கப்படுகின்றனர்.ன் காப்பிரி என்ற ஓர் சமூகக்குழு இருப்பதே எம்மில் பலருக்கு தெரியாது. இன்று பல்கலைக்கழக. பாடசாலை மாணவர்கள் அவர்களை காட்சி கூடப்பொருளாக பார்த்து வருகின்ற நிலைமை. கட்டமைத்து வருகின்ற நிலைப்பாடு அவர்கள் மீதான வெளிப்பார்வையை எமக்கு எடுத்துரைக்கின்றது.

இவ்வாறான சூல்நிலைகளில் அம்மக்கள் பண்பாட்டுத் தாழ்வுச் சிக்கலால் பாதிக்கப்படுவோராக தம்மை தாம் மறைக்க முற்படுவதோடு தமது அடையாளங்களையும் மாற்ற அல்லது மறுத்து வருகின்ற ஆபத்தான நிலைப்பாட்டை நாம் காணக்கூடியதாக உள்ளது. உதாரணமாக ஆரம்பகாலத்தில் திருகோணமலையில் காப்பிரிகளின் பைலாப் பாடல்களும் றபான் இசையும் மாலை வேளைகளில் பாலையூற்றுக் கிராமத்திற்கு உயிரூட்டுபவையாக இருந்தது. ஆனால் இன்று அவை பெருமளவு குறைந்து விட்டதாக பாலையூற்றில் வசிக்கும் ஏனைய மக்களின் கருத்துக்களிலிருந்து அறிய முடிகின்றது. இப்படி ஒவ்வொரு விடயத்திலும் இப்பண்பாட்டு தாழ்வுச்சிக்கல் பெரும் தாக்கம் புரிந்த வருகின்றது.

காப்பிரியர் என்று வர்ணிக்கப்படும் இவர்கள் குறிப்பாக இளம் தலைமுறையினர் மிகுந்த பிரயத்தனத்துடன் தமது வெளித்தோற்றங்களையும் மாற்றிக் கொள்கின்ற தன்மை இன்று பரவலானது.

இவ்வாறான செயற்பாடுகளால் அச்சமூகத்தின் தனித்துவமான அடையாளங்கள் மெல்ல மெல்ல மாற்றப்பட்டு வருவது அவர்களின் எதிரகால இருப்பு குறித்த அச்சத்தை எமக்கு ஏற்படுத்துகின்றது. இவ்வாறான சமூக குழுமம் அழித்தொழிப்பதான ஆபத்து எமது கவனிப்பிற்கும் கணிப்பிற்குமுரியது.

ஈழத்துச் சூழலில் விபத்தாக கிடைத்த பெரும் சொத்தே காப்பிரியர். இவர்களின் பண்பாடும் அடையாளங்களும் எமது நாட்டின் பண்பாடுகளுக்கு வளம் சேர்ப்பதாக இருக்கின்றன. அதேநேரம் அவை எமது கொண்டாடுதலுக்கும் உரியன. இந்நிலையில் அவர்கள் மீதான எமது கவனம் மிக முக்கியமானது. அவர்களின் பண்பாடுகளை. அடையாளங்களைப் பற்றிய புரிந்துணர்வை. அவசியப்பாட்டை கலந்தரையாடுவதும் செயற்படுத்துவதும் அவர்களோடு இணைந்து வேலை செய்வதும் முக்கியம்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.