வெளிநாட்டு தமிழர்களுக்கு சிவப்பு எச்சரிக்கை…! அடுத்த நிலை….??

Jaffna-012015ம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கான பெயர்களை உள்வாங்கும் இறுதிக்கட்ட நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டுள்ளதாக மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் தெரிவித்துள்ளார்.
2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பிற்கு பெயர் உள்வாங்கப்படாத, வாக்காளிக்க தகுதியானவர்கள் இருப்பார்களாயின் அவர்கள் தமது உரிமை கோரிக்கை கடிதத்தை தேர்தல்கள் செயலகத்திற்கு எதிர்வரும் 12ஆம் திகதிக்கு முன்னர் சமர்ப்பிக்க வேண்டும் என எமது இணையத்தளத்திற்கு அவர் குறிப்பிட்டார்.

தமது பெயர் 2015ஆம் ஆண்டுக்கான வாக்காளர் இடாப்பில் உள்வாங்க பரிந்துரைக்கப்பட்டுள்ளதா, இல்லையா என்பதனை தேர்தல்கள் செயலக இணையத்தளத்திற்குள் பிரவேசித்து, ( http://52.1.201.50/web ) உறுதிச் செய்துக் கொள்ள முடியும் என அவர் குறிப்பிட்டார்.

அவ்வாறு தமது பெயர் பரிந்துரை செய்யப்படாவிடத்து, அவர்களுக்கான உரிமை கோரும் விண்ணப்பப்படிவங்களை அனுப்பி வைக்க முடியும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் கூறினார்.

மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் கிராம சேவையாளர் அலுவலங்களில் அதற்கான விண்ணப்பங்களை பெற்று, மாவட்ட செயலகங்களுக்கு அதனை ஒப்படைக்க வேண்டும் என அவர் சுட்டிக்காட்டினார்.

இதேவேளை, வெளிநாட்டில் உள்ள இலங்கை பிரஜைகளின் பெயர்களும் 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் உள்வாங்கப்படவில்லை என கருதும் பட்சத்தில், தேர்தல்கள் செயலகத்திலுள்ள “ஆ” விண்ணப்பத்தை நிரப்பி செயலகத்திடம் கையளிக்க வேண்டும் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த இலங்கை பிரஜைகளின் உறவினர்களினால் இந்த விண்ணப்பத்தை நிரப்பி தேர்தல்கள் செயலகத்தில் கையளிக்க முடியும் எனவும் அவர் கூறினார்.

இவ்வாறு சமர்ப்பிக்கப்படவில்லை என்றால், 2015ஆம் ஆண்டு வாக்காளர் இடாப்பில் பெயர்கள் உள்வாங்கப்படமாட்டாது என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் எம்.எம்.மொஹமட் குறிப்பிட்டார். இது இலங்கை அரசின் சிவப்பு அறிவிப்பாக பார்க்கப் படுகிறது…..

அதனால் தமிழா சில கருத்துரைகள்…..

வெளிநாட்டில் உள்ள தமிழர் எத்தனை பேருக்கு இதன் தாக்கம் தெரியும் என்றால் ஆ… அப்படியா என வாயைப் பிளப்பார்கள்….

ஆனால் வருகிற கிழமை யார் வீட்டில் திருமணம் எவன் மனைவி எவருடன் தொடர்பு என்றால் எல்லாம் நாடு விட்டு நாடுகளுக்கே கதைப்பார்கள் மாறாக தமிழரின் எதிர்காலம் அதிலும் குறிப்பாக ஒவ்வெரு தமிழனினதும் தனிப்பட்ட சிக்கல் என்றால் தெரியாது.

சிலர் கூறுவார்கள் நமக்கு எதற்கு இலங்கையில் வாக்காளர் பதிவு நாங்க வெளிநாட்டில தான் இருக்கம் நமக்கு எதற்கு இந்த சிங்களவன்ட காட்டும் பாசும்…. என வியாக்கியானம்.

அட முட்டாள் தமிழா நீ வெளிநாட்டில் இருந்தாலும் உனக்கு வாக்களிக்கும் உரிமை உள்ளதா என பார் அப்படி இல்லையாயின் நீ அந்த நாட்டின் தற்காலிக வாசியாகத்தான் கணிக்கப் படுவாய் இது தெரியுமா ஓ…. ஓ…. எங்களுக்கு எல்லாம் தெரியும் என வாயைப் பிளக்காமல் வேலையைப் பாரூ தமிழா நாட்கள் அன்மித்து விட்டது வரும் நவம்பர் 12 அல்லது தமிழா நின்மிதியாக மூன்று வேளையும் சோறு சாப்பிட்டு விட்டு படுத்துறங்கி உன் வாழ்க்கையை அழித்து விடாதே.

வெளிநாடு என்று புறப்பட்டு எல்லாவற்றையும் அழித்து விட்டாய், மிகுதமாய் இருப்ப து இந்த வாக்காளர் அட்டடை ஒன்றுதான், ஒரு வேளை தமிழீம் வேண்டும் என கேட்கும் உனக்கு இந்த பதிவு இல்லா விட்டால் ஆப்புத்தான் ஏன் என்றால் நீர் இலங்கையின் குடிமகனாக இருந்தால் மட்டுமே நீ வாக்களிக்க முடியும், அது கூட தெரியுமா, இல்ல காலையும் – வேலை மாலையும் வேலை என்று திரிந்து உன் மனைவின் பெயர் கூட உனக்குத் தெரியாது அது போல் இதிலும் தவறு விட்டு விடாதே புரிகிறதா விரைவாயா தமிழா…..

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.