20,000 வீடுகளை மலையகத்தில் அமைக்க இந்தியா இணக்கம்

housஅவர் தொடர்ந்து உரையாற்றுகையில், இம்மாதம் இலங்கைக்கு வரவுள்ள இந்திய பிரதமர் மோடியின் வருகையை முன்னிட்டு இலங்கை வந்துள்ள வெளிநாட்டு அமைச்சின் செயலாளருடன் நேற்று மலையக அமைச்சர் திகாம்பரம், மனோகணேசன், பிரதியமைச்சர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தினோம்.

மலையக மக்களது பிரச்சினைகள் பலவற்றை இந்திய அதிகாரிகளிடம் முன்வைத்துள்ளோம். 2 இலட்சத்து 53 ஆயிரம் மலையக குடும்பங்கள் தோட்டங்களிலேயே சொந்த வீடு, காணியற்று இரண்டாம்தரப் பிரஜை களாகவே இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர்.

இம் மக்களுக்கு அவசரமாக 20 ஆயிரம் வீடுகளையாவது தந்துதவுமாறு இந்திய அரசாங்கத்திட்டம் கோரிக்கையை முன்வைத்து அத்திட்டத்தினை அவர்களிடம் கையளித்துள்ளோம். அதனை அவர்கள் ஏற்றுள்ளனர் என அமைச்சர் வேலாயுதம் தெரிவித்தார்.

இந்தியாவில் இருந்து கணித, விஞ்ஞான ஆசிரியர்கள் 100 பேரை இலங்கைக்கு அனுப்பி மலையக பகுதிகளில் உள்ள மாணவர்களது கல்வித் தரத்தினை உயர்த்துவதற்கும் ஆசிரியர் 100 பேரை தருவிக்க இந்திய அரசாங்கம் இணங்கியுள்ளது.

மேலும் மலையக மாணவர்களுக்கு உயர்தர சாதாரண தர பல்கலைக்கழக கல்விக்காக இந்தியாவில் புலமைப் பரிசில் திட்டத்தினையும் வழங்குமாறும் அதிகாரிகளிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.

houseஇலங்கையில் யுத்த காலத்தில் தமிழகம் சென்று அங்கு, வாழும் ஒரு இலட்சம் மக்கள் உள்ளனர். அவர்களில் 3500 இளைஞர், யுவதிகள் அங்கு கல்வி பயின்று அவர்கள் பட்டதாரிகளாகவும் கற்றுள்ளனர். அவர்களை அண்மையில் இந்தியா சென்றபோது சந்தித்தேன்.

இந்த இளைஞர்கள் யுவதிகள் தமது சொந்த நாட்டுக்கு திரும்பி இங்கு தமது கல்வி ஊடாக சேவை செய்ய காத்திருக்கின்றனர். இந்த இளைஞர்கள் பற்றி பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் பேசினேன். அவர்களுக்கு ஆசிரிய தொழில் வழங்க அவர் இணக்கம் தெரிவித்துள்ளார்.

இந்தநாட்டில் தமக்கென சொந்தமாக காணித்துண்டு இல்லாத நிலையில் உள்ள சகல மலையக குடும்பங்களுக்கும் 7 பேர்ச் காணி ஏப்ரல் 6 ஆம் திகதி வழங்கப்படுகின்றது. இந்தக் காணியின் உரிமைகளுடன் அவர்கள் ஒரு வங்கியில் கடனைப் பெறவோ அல்லது அக்காணி யில் வீடொன்றைக் கட்டி வீட்டின் மேற்கூரையில் தகரம் அல்லது தட்டை ஓடு போடாமல் அதற்கு கொங்கிaட் இட்டு மேலும் தமது வீட்டை மேல் மாடியில் பெருப்பிப்பதற்கு வசதிகள் செய்ய முடியும். அத் திட்டத்தினை அறிமுகப்படுத்த உள்ளோம்.

முன்னாள் மலையக அமைச்சரினால் மலையகத்தின் 4ஆயிரம் வீடுகள் நிர்மாணிப்பதாக சொல்லப்பட்டு அதில் இதுவரை ஒரு வீடேனும் இன்னும் நிர்மாணிக்கப்படவில்லை. அத்துடன் வட கிழக்கிலும் யுத்தத்தினால் பாதிக்கப் பட்ட மக்களுக்கு 50 ஆயிரம் வீடுகளை இந்திய அரசாங்கம் நிர்மாணிக்க உள்ளது.

இதுவரை 4 ஆயிரம் வீடுகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. வடக்கில் புகையிரத திட்டத்தினை இந்திய அரசாங்கம் வெற்றிகரமாக முன் னெடுத்துள்ளது. இந்தியப் பிரதமர் மலையகப் பகுதிக்கு வராவிட்டாலும் அவர் வடகிழக்கு பகுதிகளுக்கு விஜயம் மேற்கொள்கின்றார்.

வட கிழக்கிலும் கிளிநொச்சி, வவுனியா பிரதேசங்களிலும் மலையக மக்கள் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் யுத்த காலத்தில் இடம்பெயர்ந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களது வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கும் நாம் பாடுபடுவோம் என இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.