மீண்டும் மர்மப் பொருள் அபாயம்

Tamil_News_large_1374748இலங்கையின் தென் பிராந்திய கடற்பரப்பில் எதிர்வரும் 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை, விண்வெளியில் இருந்து WT 1190F என நாமகரணம் இடப்பட்ட மர்மப் பொருள் விழும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் அன்றைய தினம் அந்த பிராந்திய கடல் மற்றும் வான்பரப்பினை உபயோகிப்பதற்கு அரசாங்கம் தடை விதிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்த மர்மப்பொருள் குறித்த தினம் இலங்கை நேரப்படி முற்பகல் 11.48 மணியளவில், இலங்கையின் தென்முனை கடற்கரையில் இருந்து 65 முதல் 100 கிலோ மீட்டர் வரையிலான கடற்பிரதேசத்தில் விழும் என மதிப்பிடப்பட்டுள்ளது. எப்படியிருப்பினும் இந்த செயல்பாட்டினால் இலங்கைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்படாது என கொழும்பு பல்கலைக்கழக பௌதிகவியல் பிரிவின் சந்தன ஜயரட்ண தெரிவித்துள்ளார்.

அண்டவெளியில் இருந்து பூமி நோக்கி விழும் இந்த மர்மப்பொருள் பூமியின் புவியீர்ப்பு வலயத்தை ஊடறுக்கும் போது பெரும்பாலும் எரிந்து விடும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதேவேளை, வானூர்தி கட்டுப்பாட்டு நிலையமும், மீன்பிடித்துறை அமைச்சும் அந்த பிராந்தியத்தில் வானூர்தி மற்றும் படகுகள் பயணிப்பதற்கு தடை விதிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.