தோப்பூர்–சேருவில வீதியை மறித்து பொதுமக்கள் பெரும் ஆர்ப்பாட்டம்

thopur1.jpg2_.jpg3_.jpg4_.jpg4_-300x225தோப்பூர் பிர­தே­சத்தைச் சேர்ந்த சிறுவன் ஒருவன் நேற்று முன்­தி­னம் சனிக்­கி­ழமை மாலை 6 மணி­ய­ளவில் மூதூர் வீதிப் போக்­கு­வ­ரத்து பொலி­ஸாரால் தாக்­கப்­பட்­ட­மையை கண்­டித்து பொதுமக்கள் தோப்பூர்- சேரு­வில வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர். தோப்பூர் அல்­லை­நகர் பிர­தே­சத்தைச் சேர்ந்த ஆரிப் அஹ்சன் (வயது17) என்ற சிறுவன் தலைக்­க­வசம் அணி­யாமல் மோட்டார் சைக்­கிளில் சென்­றுள்ளான். குறித்த சிறு­வனை பிடித்த மூதூர் போக்­கு­வ­ரத்து பொலிஸார் சட்­ட­ந­ட­வ­டிக்கை மேற்கொள்­வ­தற்கு பதி­லாக சர­மா­ரி­யாக தாக்­கி­யுள்­ளனர். இதனை அவ­தா­னித்த தோப்பூர் பிர­தேச இளை­ஞர்கள் வீதிப் போக்­கு­வ­ரத்து பொலி­ஸா­ருடன் கருத்து முரண்­பாட்டில் ஈடு­பட அவர்கள் அவ்­வி­டத்­தி­லி­ருந்து தப்­பித்துச் சென்­றனர். இதனை அடுத்து குறித்த சிறு­வனைத் தாக்­கிய மூதூர் வீதிப் போக்­கு­வ­ரத்து பொலிஸார் நால்­வ­ருக்கும் சட்­ட­ந­ட­வ­டிக்கை மேற்கொள்ள வேண்­டு­மென தெரி­வித்த பொதுமக்கள் சேரு­வி­ல –-­தோப்பூர் வீதியை மறித்து டயர்­களை எரித்து மாலை 6 மணி தொடக்கம் 9 மணி­வரை ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.இதனால் மூன்று மணித்­தி­யாலம் தோப்பூர் ஊடான போக்­கு­வ­ரத்து முழு­மை­யாக தடைப்­பட்­டி­ருந்­தது.இவ்­வாறு வீதியை மறித்து ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட வேண்­டா­மென பொலிஸார் தெரி­வித்­தனர்.ஆனால் பொது மக்கள் அதையும் மீறி ஆர்ப்­பாட்­டத்தில் ஈடு­பட்­டனர்.இதனால் பொது மக்­க­ளுக்கும் பொலி­ஸா­ருக்கும் கருத்து முரண்­பா­டுகள் ஏற்­பட பொலிஸார் வானை நோக்கி துப்­பாக்கிப் பிர­யோகம் மேற்கொண்­டனர். பதி­லுக்கு பொது­மக்கள் பொலி­ஸாரை நோக்கி கற்­களை வீசத் தொடங்­கினர்.இதனால் பொலிஸார் அவ்­வி­டத்­தி­லி­ருந்து விலகிச் சென்­ற­னர்.யாராலும் சம்­ப­வத்தை கட்­டுப்­ப­டுத்­த முடி­யா­மல் போக குறிப்­பிட்ட இடத்­திற்கு திரு­கோ­ண­மலை மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அப்­துல்லா மஹ்ரூப் வருகை தந்தார். இதனை அடுத்து தோப்பூர் ஜம்­மி­யத்துல் உலமா, மூதூர் பொலிஸ் நிலைய பொறுப்­ப­தி­காரி ஆகி­யோர்­க­ளுக்­கிடை­யி­லான சந்­திப்பு தோப்பூர் பெரி­ய­பள்­ளி­வா­யலில் இடம் பெற்­றது. அதில் பொதுமக்­களால் சில கோரிக்­கைகள் முன் வைக்­கப்­பட்­டன. வெள்ளிக் கிழமை நாட்­களில் பள்­ளி­வா­யல்­க­ளுக்கு முன்னால் பொலிஸார் நின்று கொண்டு மோட்டார் சைக்­கிள்க­ளை சோத­னை­யி­டு­வதை நிறுத்த வேண்டும்,தோப்பூர் பிர­தே­சத்­தி­லுள்ள சின்ன வீதி­க­ளுக்குள் போக்­கு­வ­ரத்து பொலிஸார் வரு­வது தடை செய்யப்ப­ட வேண்டும்,பொது மக்­க­ளுக்கு பொலிஸார் அடிப்­பது கூடாது, குறித்த சிறு­வனை தாக்­கிய நான்கு பொலி­ஸாரும் இட­மாற்றம் செய்­யப்­பட வேண்டும் போன்ற கோரிக்­கைகள் பொது மக்­களால் முன்­வைக்­கப்­பட்­டன.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.