மகனின் கல்விக்காக உண்ணாவிரதம் மேற்கொண்ட தாய்

e4e7d101091e382c5e8bba3d7b086b02சிலாபம் பகுதியில் வசிக்கும் தாய் ஒருவர் தனது மகனுக்கு பாடசாலையில் அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று (வியாழக்கிழமை) அடையாள உண்ணாவிரதப் போராட்டமொன்றை நடத்தியுள்ளார்.

சிலாபம், ஆனந்த தேசிய பாடசாலையில் கல்வியைத் தொடர தனது மகனுக்கு அனுமதி மறுக்கப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தே அவர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

ஆனந்த பாடசாலை முன்பாக உள்ள சிலாபம் கொழும்பு பிரதான வீதியின் பாதசாரிகளின் கடவை நடுவில் குறித்த தாய் அமர்ந்து தனது மகனுடன் இந்த ஆர்ப்பாட்டத்தை முன்னெடுத்திருந்தார்.

6 வயதான சானீல் என்ற சிறுவன் தரம் ஒன்று கல்வி கற்பதற்காக சிலாபம் ஆனந்த தேசிய பாடசாலையில் விண்ணப்பித்து, நேர்முகப் பரீட்சகைளில் சித்திபெற்றும் அனுமதி மறுக்கப்பட்டமை தொடர்பில் சானீலின் பெற்றோரால் பாடசாலை நிர்வாகத்திடம் விளக்கம் கோரப்பட்ட போது பெரும் தொகை பணம் கேட்கப்பட்டுள்ளது.

எனினும், வறிய குடும்பம் என்பதனால் இக்கோரிக்கையினை சானீலின் தாய் நிராகரித்துள்ளார். இருப்பினும், தொடர்புடைய அதிகாரிகளுடன் இது தொடர்பில் பேச்சு நடத்தி வந்தமயினால், சிறுவனது 11 மாத கால கல்வி பாதிப்படைந்துள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நியாயம் கோரி அத்தாய் கடந்த வாரம் போராட்டம் ஒன்றை முன்னெடுத்திருந்துடன் நேற்று அடையாள உண்ணாவிரதப் போராட்டத்தை முன்னெடுத்திருந்தார்.
தனக்கு இழைக்கப்பட்டுள்ள அநீதி தொடர்பில் ஜனாதிபதி கவனம் செலுத்த வேண்டும் என அத்தாய் கோரிக்கையையும் முன்வைத்திருந்தார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.