இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கான பயிற்சிகள் தொடரும் – இந்தியா

CAஇலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கான பயிற்சிகள் தொடர்ந்து வழங்கப்படும் என்று இந்தியா தெரிவித்துள்ளது.

இந்தியாவின் பாதுகாப்பு அமைச்சர் மனோகர் பாரிக்கார் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் பாதுகாப்பு தரப்பினருக்கு பயிற்சியளிக்கப்படுவதற்கு தமிழகத்தில் எதிர்ப்புகள் வெளிப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தமிழகம் – குன்னூரில் உள்ள இந்திய பாதுகாப்பு பயிற்சி கல்லூரியில் இலங்கை பாதுகாப்பு தரப்பினருக்கு பயிற்சியளிக்கப்பட மாட்டாது.

ஆனால் இந்தியாவில் உள்ள ஏனைய பயிற்சி கல்லூரிகளில் இலங்கை இராணுவத்துக்கு தொடர்ந்தும் பயிற்சியளிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.