பொலிஸாரால் கைது செய்யப்பட்ட மகனை தேடி அலையும் தாய்

partheepan_missingமொனராகல வெல்லவாய பிரதேசத்தில் பாலா ஸரோஸ் (பல்பொருள்) கடையில் 5 வருடங்களாக பணியற்றிய வடமராட்சி அல்வாய் கிழக்கு பத்தனை பகுதியை சேர்ந்த சிவஞானம் பார்த்தீபன் (வயது 26) என்ற இளைஞர் 2008-08-21 திகதி தனது வீட்டுக்கு பணப்பாரிமற்றம் செய்ய வங்கி ஒன்றுக்கு சென்ற சமயம் புத்தளப் காவற்துறையினரால் கைது செய்யப்பட்டார்.

இன்றுவரை சிறைசாலையில் தடுத்து வைக்கப்பட்டபோதும் இதுவரை அவரது குடும்பத்தினருக்கு தகவல் எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

சக கைதிகளினால் உறவினர்களுக்கு தெரியப்படுத்தியபோதும் பொலிஸ் மற்றும் சிறைசாலை நிர்வாகத்தினால் குடும்பத்துக்கு தெரியப்படுத்தவில்லை.

அவரது தாயார் பல முறை சிறைசாலைகளுக்கு சென்றும் அவருக்கு அவரது மகனை பார்க்க அனுமதிக்கவில்லை மாறி மாறி பல்வேறுபட்ட சிறைகளில் தடுத்து வைப்பதினால் மகன் எந்த சிறையில் தற்போது உள்ளர் என்பது அறியாது மகனை தேடி அலைவதாக தாயார் தெரிவித்துள்ளார்.

அவரது தாயார் இதுதொடர்பாக தெரிவிக்கையில்,

கடந்த ஏழு ஆண்டுகளாக எனது மகன் தொடர்பாக தேடி அலைகின்றேன். இதுவரை அவரை என்னால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனது உறவினர் ஒருவரின் வெல்லவாய கடையில் பணிபுரித்தவர் இந்த நிலையில் எமக்கு பணம் அனுப்புவாதற்காக வங்கி ஒன்றுக்கு சென்றவேளை புத்தளம் பொலிஸ் கைது செய்தாக அவர்களின் முறைபாட்டில் எமக்கு தெரியபடுத்தினார்.

ஆனால் இன்றுவரை எங்கு உள்ளார் என்ற விடயத்தை அவர்கள் எமக்கு இதுவரை தெரியப்படுத்தவில்லை. இது தொடர்பாக யாழ் மனித உரிமை ஆணைக்குழு ஊடக புத்தள பொலிஸாரிடம் கேட்டபோதும் அதற்கு தாம் அவரை விடுவித்துள்ளதாக அறிக்கை கொடுத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட ஒருவரை எவ்வாறு பிணை இல்லாமால் விடுவிக்கமுடியும்? அவ்வாறு விடுவித்தாலும் ஒருவர் பொறுப்பு ஏற்கமால் விடுவித்தனாரா?

இந்த நிலையில் 2012 ஆண்டு மகீசன் சிறைச்சாலையில் இருப்பதாக எமக்கு தகவல் கிடைத்தது அங்கு சென்றபோது சிறைச்சாலை உத்தியோகத்தரினால் பார்ப்பதற்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

இவ்வாறு பல சிறைகளுக்கு சென்ற போதும் எனது மகனை கண்டுபிடிக்க முடியவில்லை எனது மகன் 14 சிறைச்சாலைகளில் ஒரு சிறையில்தான் இருக்கின்றார்

அவரை விடுவிக்க வேண்டும் என்று தாய் கண்ணீர்மல்க தெரிவித்துள்ளார்.

இவர் கைது செய்யப்பட்டது தொடர்பாக யாழ் மனித உரிமை ஆணைக்குழு சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம், ஜனாதிபதி காணமால் போனோரை விசாரணை செய்யும் ஆணைக்குழு, கற்றுகொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு,

தமிழ் தேசிய கூட்டமைப்பு, ஐ.தே. கட்சி விஜயகலா மகேஸ்வரன், மனோ கணேசன் போன்ற அமைப்புக்கள் மற்றும் கட்சி தலைவர்களிடம் முறைபாடு செய்யப்பட்டபோதும் இதுவரை எந்தவிதமான தகவல்களையும் எமக்கு கிடைக்கவில்லை என்று தனது உள்ளக்குமுறலை தெரிவித்துள்ளார்.

தனது மகனை விடுவிக்குமாறு கண்ணீர்மல்க சம்பந்தப்பட்டவர்களிடம் வேண்டுகொள் விடுத்துள்ளார். – See more at: http://www.vannionline.com/2015/11/blog-post_19.html#sthash.sozC5XXZ.dpuf

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.