பாரிய ஊழல் மோசடி வழக்கில் நாமல் ராஜபக்ஸ

29510பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் இன்று ஆஜராகியிருந்தார்.
கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது சுயாதீன தொலைக்காட்சிக்கு 200 மில்லியன் ரூபா நட்டம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் சாட்சிகளை பதிவு செய்வதற்கு நாமல் ராஜபக்ஸவிற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இந்த விடயம் தொடர்பில் கிடைக்கப் பெற்ற அழைப்பினை ஏற்று பாரிய ஊழல் மோசடி தொடர்பில் விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ வருகை தந்திருந்தார் .
சட்டத்தரணிகளால் அறிக்கை சமர்பிக்கப்படாததன் காரணமாக ஆணைக்குழுவின் இன்றைய நாளுக்கான விசாரணைகளுக்கான நாளை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.