முரளி, அரவிந்த விரைவில் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவுக்கு

MUMBAI, INDIA - MARCH 31:  Muttiah Muralitharan of Sri Lankahas a chat with former player Aravinda Da Silva during the Sri Lanka nets session at the Wankhede Stadium on March 31, 2011 in Mumbai, India.  (Photo by Tom Shaw/Getty Images) *** Local Caption *** Muttiah Muralitharan;Aravinda Da Silva
MUMBAI, INDIA – MARCH 31: Muttiah Muralitharan of Sri Lankahas a chat with former player Aravinda Da Silva during the Sri Lanka nets session at the Wankhede Stadium on March 31, 2011 in Mumbai, India. (Photo by Tom Shaw/Getty Images) *** Local Caption *** Muttiah Muralitharan;Aravinda Da Silva

நட்சத்திர கிரிக்கட் வீரர்களான முத்தையா முரளிதரன் மற்றும் அரவிந்த டி சில்வா ஆகியோரிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப் பிரிவு விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
விரைவில் இவர்களை அழைத்து விசாரணை நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
2018ம் ஆண்டில் இலங்கையில் பொதுநலவாய நாடுகள் அமைப்பு விளையாட்டுப் போட்டிகளை நடாத்துவதற்காக சந்தர்ப்பத்தை பெற்றுக் கொள்ளும் முயற்சிகளுக்காக முறைகேடாக பணம் செலவிடப்பட்டுள்ளது என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் சார்பில் இந்த சந்தர்ப்பத்தைப் பெற்றுக் கொள்வதற்காக பிரதிநிதிகளாக முரளீதரன், அரவிந்த டி சில்வா போன்றவர்கள் 2011ம்ஆண்டு நவம்பர் மாதம் 11ம் திகதி சென் கீட்ஸிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.
முரளீ மற்றும் அரவிந்த ஆகியோரின் பயணச்செலவுகளை மஹிந்த ராஜபக்க்ஷ அரசாங்கம் ஏற்றுக்கொண்டுள்ளது.
இங்கிலாந்திருந்து வந்து முரளீ இந்த நிகழ்வில் பங்கேற்றுள்ளார்.
உணவு தங்குமிடவசதி, பயண செலவுகள் ஆகியனவற்றை அப்போதைய அரசாங்கம் மேற்கொண்டுள்ளது.
இந்த விடயம் குறித்து முரளீ மற்றும் அரவிந்த ஆகியோரிடம் நிதிக் குற்றவியல் விசாரணைப்பிரிவினர் விசாரணை நடத்தக் கூடுமென எதிர்பார்க்கப்படுகிறது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.