சம்பந்தன் ஐயா தலைமையில் பாராளுமன்றத்தில் மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியவர்கள் நாங்கள்

ariyam-a1இலங்கை பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாகவும் இறுதித் தடவையாகவும் பாராளுமன்றத்தில் மாவீர்களை நினைவு கூர்ந்து விளக்கேற்றி வணக்கம் செய்தவர்கள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினராகிய நாமே என கூறினார் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பாக்கியசெல்வம் அரியநேத்திரன்.

இலங்கை தமிழரசுக்கட்சி மண்முனை தென்மேற்கு பட்டிப்பளை கிளையின் கூட்டம் அதன் தலைவர் சி.புஷ்பலிங்கம் தலைமையில் அரசடித்தீவில் அவரின் இல்லத்தில் நேற்று 21/11/2015,சனிக்கிழமை இடம் பெற்ற போது அதில் தொடர்ந்து உரையாற்றிய அரியநேத்திரன்.தலைவர் சம்பந்தன் ஐயா 2013ல் யாழில் இடம்பெற்ற மேதினத்தில் சிங்கக்கொடியை தூக்கியது தொடர்பாக தமிழ் மக்களில் சிலர் அதிருப்தியை வெளியிட்டனர்
ஆனால் சிங்ககொடி தூக்குவதற்கு முன் கடந்த 2006ம் சம்பந்தன் ஐயா திருமலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு காரியாலயம் திறப்பு நிகழ்வில் புலிக்கொடியை ஏற்றினார் என்பதை ஞாபகப்படுத்துகின்றேன் அது மட்டுமன்றி வரலாற்றில் முதல் தடவையும் இறுதித் தடவையுமாக கடந்த 2004ம் ஆண்டு கார்த்திகை 27ல் பாராளுமன்றத்தில் சம்பந்தன் ஐயா தலைமையில் 22பாராளுமன்ற உறுப்பினர்களும் மாவீரர்களுக்கு விளக்கேற்றி அஞ்சலி செலுத்தி மாவீரர்களை நினைவு கூர்ந்து சம்பந்தன் ஐயா உரையாற்றியதையும் மறக்க முடியாது.

சிங்ககொடி தூக்கியதால் துரோகம் என்கின்றோம் புலிக்கொடி ஏற்றினால் தியாகி என்று சொன்னோமா ? இல்லை அந்தந்த காலமும் சூழ்நிலைகளும் அரசியல் தலைமைகளையும் மாற்றத்துக்கு உட்படுத்தும் என்பதற்கு இதை தவிர உதாரணங்கள் சொல்லத் தேவையில்லை ஆனால் இவ்வாறான சம்பவங்களால் எமது கொள்கையை மாற்றி சரணாகதி அரசியல் செய்வோமானால்தான் அது துரோகமாகும்.
எடுத்த எடுப்பில் ஒருவரின் உண்மை நிலையை உணராமல் அதன் பின்னணிகளை ஆராயாமல் காட்சிகளை மட்டும் பார்த்து துரோகம் என்ற முடிவுக்கு வருவதை நாம் அனைவரும் தவிர்க்க வேண்டும் எனவும் அரியம் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.