சுமந்திரன் கள்ள நாடகம் ஆரம்பம்

sumanthiran-2015-01சுமந்திரன் பயணிக்கும் வெளிநாடுகளில் எல்லாம் அவருக்கு செருப்படி விளாத குறையாக மக்கள் நாக்கை பிடுங்கிறமாதிரி கேள்வி கேட்டு வருகிறார்கள். இதனால் புலம்பெயர் தமிழ் மக்களிடம் தனக்கு நல்ல பெயர் இல்லை என்பதனை அவர் நன்றாக உணர்ந்துவிட்டார். இது ஊரில் உள்ள தமிழர்கள் மத்தியிலும் பரவ ஆரம்பித்துவிட்டது. உடனே இதனை சமாளிக்க நரி வேலைகளில் ஈடுபட்டுள்ளார். அது என்னவென்றால் , கடந்த வெள்ளி பாராளுமன்றில் அவர் உரையாற்றும் போது. வட கிழக்கு மக்கள் மாவீரர் தினத்தை நினைவுகூர இலங்கை அரசு அனுமதிக்கவேண்டும் என்று இவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதனூடாக தான் ஏதோ விடுதலைப் புலிகளின் அபிமானி என்று காட்டிக் கொள்ள முனைவதும். இதனூடாக மக்களின் ஆதரவைப் பெறவும் இவர் ஒரு முயற்ச்சி எடுத்து வருவதாக இலங்கையில் இருந்து கிடைக்கும் தகவல்கள் கூறுகிறது. கனடா நாட்டில் வசிக்கும் கிழட்டு நரி ஒன்றும் , லண்டனில் வசிக்கும் இவரது ஆதரவாளர் ஒருவருமே இவ்வாறு பேசினால் , உங்களுக்கு ஆதரவு பெருகும் என்று எடுத்துச் சொல்லியுள்ளார்களாம். இதனால் தான் இப்படி ஒரு போடு போட்டுள்ளார் சுமந்திரன். இவர்போன்ற குள்ள நரிகள் பற்றி தமிழர்கள் என்ன அறியாதவர்களா ?

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.