விடுதலைப் புலிகளுக்கு நிதி: கனடாவில் இந்து கோயிலுக்கு எதிராக வழக்கு

mulli padukolaiகனடா டொரன்டோவில் அமைந்துள்ள கந்தசுவாமி கோயிலில் விடுதலைப் புலிகளுக்கு நிதி சேகரிக்கப்பட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் எல்லை பாதுகாப்பு பிரிவினர் பிராந்திய நீதிமன்றமொன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை ஒன்றின் போதே இந்த தகவல் வெளியானதாக த நெஸனல் போஸ்ட் செய்தித் தாள் தெரிவித்துள்ளது.

குறித்த கோயிலில் பணியாற்றிய அர்ச்சகர் ஒருவர் விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என கூறி வழக்கு ஒன்று தாக்கல் செய்யப்பட்டிருந்நது.

இதன் போது குறித்த கோயில் கனடாவில் தடை செய்யப்பட்டுள்ள விடுதலைப் புலிகளின் ஆதரவு அமைப்பான உலகத்தமிழர் இயக்கத்தால் நிறுவகிக்கப்பட்டு வருவதாக பாதுகாப்பு பிரிவினர் சுட்டிக்காட்டினர்

எனினும் இதனை மறுத்துள்ள ஸ்காப்ரா கோயில்களின் பணிப்பாளர் தனபாலசிங்கம் குறித்த கோயிலுக்கு கனடாவில் தடை செய்யப்பட்டவர்கள் வந்து செல்வதால் அதனை அவர்களின் நிறுவகத்துக்கு உரியது என கூறுவது ஏற்க முடியாது என குறிப்பிட்டுள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.