பொலிஸ் பரிசோதகருக்குத் திடீர் இடமாற்றம்

PrisonKeysShutterstock-555x2991முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்க்ஷவின் ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற பாரிய மோசடிகள் குறித்து பொலிஸ் திணைக்களத்தின் சார்பில் விசாரணைகளை மேற்கொண்டு வந்த ஒருவருக்கு திடீர் இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

குறித்த விசாரணைகள் தொடர்பில் முக்கிய ஆதாரங்களை திரட்டி விசாரணைகளை ஒருங்கமைத்து வந்த பொலிஸ் பரிசோதகரான ஜயசேன கமகே என்பவருக்கே இந்த இடமாற்ற உத்தரவை பொலிஸ் மா அதிபர் பிறப்பித்துள்ளார்.

குறித்த பொலிஸ் பரிசோதகரை அவரது முன்னைய பணியிடமான கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கே மீண்டும் இடமாற்றம் செய்துள்ள நிலையில், இது பாரிய மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் நடவடிக்கைகளை பெருமளவில் பாதித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

You may also like...

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.