யுத்தத்திற்கு ஆதரவு அளித்தது தவறே அதற்காக இப்போது வருந்துகிறோம்

ramalingam-chandrasekar_CIகடந்த காலத்தில் யுத்தத்திற்கு ஆதரவு வழங்கியது தவறு என்பதை ஏற்றுக்கொள்ளுகிறோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் பாராளுமன்ற பிரதிக்குழுக்களின் தவிசாளருமான இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்தார்.

கிளிநொச்சிக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்ட அவர் குளோபல் தமிழ் செய்திகளின் விசேட செய்தியாளருடன் உரையாடியபோதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை நினைவுகூறும் கார்த்திகை வீரர்கள் ஞாபகார்த்த நாட்கள் கொண்டாடப் படுவதைப்போல ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ் மக்களின் பிள்ளைகளை நினைவுகூறும் உரிமை அவர்களுக்கு உண்டு என்றும் அவர் கூறினார்.

2009இற்கு முன்னரான காலத்தில் ஜே.வி.பியில் இடம்பெற்ற பல தவறுகளில் யுத்தத்திற்கு ஆதரவளித்தமையும் ஒன்று என்றும் அதற்காக தமது கட்சியின் தலைவர் அண்மையில் கார்த்திகை வீரர்களின் ஞாபகார்த்த கூட்டத்தில் வருத்தம் தெரிவித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

கட்சி அவ்வாறான நிலமைக்கு தள்ளப்பட்டிருந்தது என்றும் அவ்வாறான அரசியல் இக்கட்டு ஏற்பட்டது என்றும் கூறிய அவர் இவ்வாறு வருத்தம் தெரிவித்துவிட்டதனால் தமிழ் மக்களிடம் தமது கட்சி குறித்த பார்வை மாறிவிடாது என்று கருதுவதாகவும் அவர் மேலும் கூறினார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.