
தமிழ் அரசியல் கைதிகளின் விடுதலைக்காக தமது உயிரையே தியாகம் செய்த மாணவனுக்காக, யாழ். பல்கலைக்கழகத்தில் மெழுகுவர்த்தி ஏற்றி இன்று அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
இதன்போது பல்லைக்கழகத்தில் கறுப்புக்கொடி கட்டப்பட்டு, மாணவர்களால் எதிர்ப்பு நடவடிக்கையொன்றும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
பல்கலைக்கழக வளாகத்தில் ஒன்றுதிரண்ட மாணவர்கள், மாணவர் சக்தி மாபெரும் சக்தி, உண்ணாவிரதத்திற்கு பதில் சொல்லாத அரசே மாணவனின் உயிர் தியாகத்திற்கு பதில் சொல்வாயா?, மாணவனுக்கு புரிந்தது நல்லாட்சி அரசுக்கு புரியவில்லையா?, உரிமைகளுக்காக இத்தனை காலமும் ஈர்ந்த உயிர்த்தியாகம் போதாதா?, இன்று பாடசாலை மாணவன் நாளை யார்? போன்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட சுலோகங்களை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாகச் சென்று தமது எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.