இராஜாங்க அமைச்சர் ஒருவரின் இணைப்பாளர் கைது

arrest_54நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் அதிகாரியாக தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டு டுபாய் நாட்டில் பணிப்புரியம் பெண் ஒருவரிடம் நிதி வசூலித்தார் என கூறப்படும் இராஜாங்க அமைச்சர் ஒருவரின் நோட்டன்பிரிட்ஜ் பிரதேசத்தின் இணைப்பாளர் ஒருவர் சந்தேகத்தின் பேரில் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளார் என நோட்டன்பிரிட்ஜ் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த பெண் டுபாய் நாட்டில் பணிப்பெண்ணாக தொழில்புரிந்து வரும் நிலையில் அவரது கணவர் இங்கிருத்து அழைப்பை ஏற்படுத்தியுள்ளார். அழைப்பை ஏற்படுத்திய அவர் நீ நாட்டிற்கு விரைவில் வராவிடின் தான் வசிக்கும் வீட்டை விற்றுவிட்டு இன்னொரு இடத்தில் குடியேறப்போவதாக மிரட்டியுள்ளார்.

இதனையடுத்து குறித்த பெண் பயத்தில் நோட்டன்பிரிட்ஜ் பகுதியில் வசிக்கும் தனக்கு நெருக்கமான பெண்ணிடம் தொலைபேசியினூடாக தொடர்புகொண்டு நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தின் அதிகாரி ஒருவரின் தொலைபேசி இலக்கத்தை கேட்டுள்ளார். அதன்பிறகு பொலிஸ் நிலைய அதிகாரி என கூறப்படும் குறித்த இணைப்பாளருடைய தொலைபேசி இலக்கத்தை அந்த பெண் டுபாயில் உள்ள பெண்ணுக்கு வழங்கியுள்ளார்.

அதன்பிறகு குறித்த இலக்கத்துடன் தொடர்பு கொண்ட பெண் தனக்கு நேர்ந்ததை அவரிடம் விவரித்துள்ளார். இதனையடுத்து வீட்டை உங்களுடைய கணவர் விற்காமல் இருக்க தான் நடவடிக்கை எடுக்கின்றேன் என்றும் அதற்காக 50000 ரூபா தனது வைப்பிலிடுமாறும் கூறியுள்ளார்.

இதனையத்து அப்பெண்ணால் 20000 ரூபா மட்டும் வைப்பிலிடப்பட்டுள்ளது. இவ்வாறு வைப்பிலிட்ட பின் வங்கியால் வழங்கப்பட்ட வைப்பு சீட்டில் குறிப்பிடப்பட்ட பெயர் தொடர்பில் குறித்த பெண்ணுக்கு சந்தேகம் ஏற்ப்பட்டுள்ளது. அதனையடுத்து நாடு திரும்பிய அவர் நோட்டன்பிரிட்ஜ் பொலிஸ் நிலையத்தில் இது தொடர்பாக முறைப்பாடு செய்துள்ளார்.

அதன்பின் இந்த வங்கி கணக்கு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் சந்தேக நபரான இராஜாங்க அமைச்சரின் நோட்டன்பிரிட்ஜ் பிரதேசத்தின் இணைப்பாளரை கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நோட்டன்பிரிட்ஜ் பம்பரகலை பகுதியைச் சேர்ந்தவர் என தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபரை அட்டன் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருப்பதாக பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.