இலங்கையர்களின் புகலிடக் கோரிக்கை! கனேடிய சாசனத்தில் மாற்றம்

Canada-flag-450x254கனேடிய குடிவரவு சட்டங்களுக்கு எதிராக அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்கள் நாட்டுக்குள் பிரவேசிப்பதனை தடுக்கும் வகையிலான குடிவரவு சட்டங்கள் அரசியல் சாசனத்திற்கு முரணான வகையில் அமைந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்கள் தொடர்பில் கனேடிய குடிவரவு திணைக்களத்தின் நிலைப்பாடு, அந்நாட்டு அரசியல் சாசனத்திற்கு முரணானது என சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
மனிதாபிமான அடிப்படையிலான நடவடிக்கைகளையும் ஒடுக்கும் வகையில் சட்டங்கள் அமைந்துள்ளதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
பயணிகள் மற்றுமொருவருக்கு உதவிகளை வழங்குதல், அல்லது குடும்ப உறுப்பினர்கள் மற்றுமொரு உறவினருக்கு உதவிகளை வழங்குதல் போன்றனவும் தண்டனைக்குரிய குற்றமாக அமைந்துள்ளதாக தெரிவித்துள்ளது.
புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த சர்வதேச சட்டங்களுக்கு மதிப்பளிக்கும் வகையில் கனடாவின் சட்டங்கள் அமைய வேண்டுமென பிரதம நீதியரசர் பெவர்லி மெக்லாச்சீன் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்தின் குடிவரவு சட்டங்கள் “தந்தை பிள்ளைக்கு போர்வையை வழங்கினாலும், சக படகுப் பயணிகள் உணவைப் பகிர்ந்து கொண்டாலும்” குற்றமாகக் கருதப்படுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சண்சீ கப்பலில் பயணித்த இலங்கைப் புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த இரண்டு வழக்குகள் தொடர்பில் இவ்வாறு கருத்து வெளியிடப்பட்டுள்ளது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.