ஜனாதிபதி- கனடா பிரதமர் சந்திப்பு

41226e197bc6e91a1cb5a3bb0450afe2_Lஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் இடையிலான சந்திப்பொன்றஞ நேற்று (28) மோல்ட்டாவில் இடம்பெற்றது.
பொதுநலவாய நாடுகளின் அரச தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்ள தற்போது மோல்ட்டா சென்றுள்ள ஜனாதிபதி கனடா பிரதமரை சந்தித்துள்ளார்.

சுதந்திரத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநிறுத்தி இலங்கையின் அபிவிருத்தியை முன்னெடுத்து செல்வதற்கான தம்மால் முடிந்த அனைத்து உதவிகளையும் வழங்குவதாக கனடா பிரதமர் இந்த சந்திப்பின் போது உறுதியளித்தார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.