லண்டனில் உள்ள காவாலி TCC அமைப்பில் உள்ளதாக பூச்சாண்டி காட்டி வருகிறார் – புகைப்படம் இணைப்பு

da7b3d3fd315c2eabed71e319a5b0e5aகார் பார்கில் ஒரு விளம்பர துண்டை வைத்துவிட்டார்கள் என்றும். அவர்களை தான் அடித்து விரட்டி விட்டேன் என்றும் தனக்கு தானே அப்பூரூவராக மாறி செய்தி வெளியிட்ட லண்டன் காவாலி வசமாக மாட்டிக்கொண்டார். இவர் ஏற்கனவே லண்டனில் பல குற்றச்செயல்களில் இடுபட்டவர் என்றும் தெரிய வருகிறது. இது இவ்வாறு இருக்க வெம்பிளி அரீனா கார் பார்க் ஏதோ தனக்கு சொந்தமான இடம் எனவும். அங்கே நோட்டீஸ் வைக்க வந்தவர்கள் எதிராளிகள் என்றும் இவர் ஒரு வீடியோவை வெளியிட்டு வசமாக மாட்டிக்கொண்டுள்ளார். அதில் தன் வாயால் , தான் அவர்களை அடித்து விரட்டியதாக ஒப்புக்கொண்டுள்ளார். இதனை டவுன் லோட் செய்து , லண்டன் மெற்றோ பொலிடன் பொலிசாரிடம் தமிழர்கள் கொடுத்துள்ளார்கள்.

இதுபோக தனக்கு கட்டுப்படாத தமிழ் இளைஞர்களை மிரட்டி வரும் இந்த காவாலி, London ல் உள்ள Tesco ஒன்றில் வேலை பார்த்து வருவதும் கண்டறியப்பட்டுள்ளது. பொலிசாருக்கு தமிழர்கள் பலர் முறைப்பாடுகளை தெரிவித்துள்ளதோடு, டெஸ்கோ நிறுவனத்தையும் அவர்கள் தொடர்புகொள்ள இருக்கிறார்கள். தான் செய்யும் குற்றத்தை தானே ஒப்புக்கொண்டு வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளான் இந்தக் காவாலி. அது போக இவன் லண்டன் TCC ( தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில்) ஒரு முக்கிய அங்கத்துவர் என்றும் பலருக்கு கூறி வருகிறான். தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவில் இவன் ஒரு அங்கத்துவராக இருப்பின் , அந்த அமைப்பின் மீதும் சந்தேகம் எழுகிறது.இது போன்ற காவாலிகளை ஏன் , TCC அமைப்பு உள்வாங்கவேண்டும் என்ற கேள்விகளும் எழுகிறது அல்லவா ?

மாவீரர் தினத்தன்று , வெம்பிளி பார்க் தொடரூந்து நிலையம், மற்றும் கார் பார்க்குக்கு அருகே நின்று அமைதியா சிலர் துண்டுப் பிரசுங்களை வினியோகித்தார்கள். அது வியாபார நோக்கம் கொண்டது என்று கூறி இந்த ரவுடி அவர்களை தாக்கி கடுமையாக கயங்களுக்கு உள்ளாகியுள்ளான். இதனால் பாதிக்கப்பட்ட தமிழ் இளைஞர்கள் வைத்தியசாலை சென்று சிகிச்சை பெற நேர்ந்துள்ளது. அது போக அவர்களை நான் தான் தாக்கினேன் என்று இந்த காவாலி வாக்குமூலம் வேறு கொடுத்துள்ளான். இதனால் இவனை கைதுசெய்யவேண்டும் என்ற முறைப்பாடுகள் பல தற்போது எழுந்துள்ளது. இவன் கூறும் விடையம் என்னவென்றால் ,

மாவீரர் தினத்தன்று வியாபாரம் செய்யவேண்டாம் என்று. ஆனால் மாவீரர் நடைபெறும் இடத்தில் கொத்துரொட்டி விற்கிறார்கள். வடை , தொடக்கம் CD விற்கிறார்கள். அதுபோக ஆடல் பாடல் நிகழ்சிகளை நடத்துகிறார்கள் . (ஈழத்தில் இப்படியா மாவீரர் தினம் நடக்கிறது ?) அனைவரும் ஒரு முறை சிந்திப்பது நல்லது. காசை மையமாகக் கொண்டு லண்டனில் நடத்தப்படும் அனைத்து நிகழ்ச்சிகளும் , மீண்டும் ஒழுங்கு செய்யப்படவேண்டும். காவாலிகள் , மற்றும் கிருமினல்கள் TCC அமைப்பின் நிழலில் இருந்துகொண்டு அடாவடியில் ஈடுபடுவது மீண்டும் தடுக்கபப்டவேண்டும்.

எமக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், தற்போது பொலிசார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்கள். விரைவில் இந்த காவாலி கைதுசெயப்படலாம் என்று அறியப்படுகிறது.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.