இப்போதாவது காணாமல் போனவர்களின் தகவல்களை வெளியிடு : யாழில் ஆர்ப்பாட்டம்

F0.dfd0f3d0fdகாணாமல்போனவர்கள் தொடர்பான தகவல்களை அரசாங்கமே இப்போதாவது வெளியிடு என்ற கருப்பொருளில் கோசங்களும், பதாகைளும் தாங்கியவாறு காணாமல் போனவர்களின் உறவுகளால் இன்று யாழ்ப்பாணத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

யாழ்.மத்திய பஸ் நிலையத்தில், சமவுரிமை இயக்கத்தின் ஒழுங்கமைப்பில் இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நல்லாட்சி அரசாங்கம் என மார்தட்டிக் கொள்ளும் அரசாங்கமே, எங்களுடைய பிள்ளைகள் எங்கே? எங்கள் பிள்ளைகளை என்ன செய்தார்கள்? என்பதை இப்போதாவது கூறு என கண்ணீர்மல்க கேட்டு காணாமல்போனவர்களின் உறவினர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.