வடக்கில் 29 வைத்தியசாலைகளில் நிரந்தர வைத்தியர்கள் இல்லை

malaiyakam20151119வட­மா­கா­ணத்­திற்­குட்­பட்ட 104 வைத்­தி­ய­சா­லை­களில் 29 வைத்­தி­ய­சா­லை­களில் நிரந்­தர வைத்­தி­யர்கள் இன்றி இயங்கி வரு­கின்­றன. அத்­தோடு குறித்த இடங்­களில் மக்­களின் அடிப்­படைத் தேவை­கள் பூர்த்தி செய்­யப்­ப­டாமல் இருப்­ப­தனால் 2016ஆம் ஆண்டு மத்­திய அர­சாங்­கத்­துடன் கலந்­து­ரை­யாடி நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக வட­மா­காண சுகா­தார அமைச்சர்  தெரி­வித்­துள்ளார்.

வட­மா­காண சுகா­தார அமைச்சின் 2016ஆம் ஆண்­டுக்­கான வரவு செல­வுத்­திட்ட விவாதத்தில் உரையாற்றும்போதே இத­னைத்­தெ­ரி­வித்­துள்ளார்.

வட மாகா­ணத்தில் 104 வைத்­தி­ய­சா­லை­களில் 29 வைத்­தி­ய­சா­லைகள் நிரந்­தர வைத்­தி­யர்கள் இன்றி தற்­போதும் இயங்­கிக்­கொண்­டி­ருக்­கின்­றன. அவ்­வி­டங்­களில் மக்­களின் அடிப்­ப­டைத்­தே­வைகள் கூட பூர்த்தி செய்­யப்­ப­டாமல் உள்­ளது.இவற்றில் அநே­க­மான இடங்­களில் மீள்­கு­டி­யேற்றம் வேக­மாக நடை­பெற்றுக் கொண்­டி­ருப்­ப­தனால் இவ் இடங்­களில் மக்­களின் இக்­கு­றை­பா­டு­களை நிவர்த்­தி­செய்­வ­தற்கும் வைத்­திய அதி­கா­ரிகள் நிரந்­த­ர­மாக நிய­மிக்­கப்­ப­டு­வ­தற்கும் மத்­திய அர­சினால் நட­வ­டிக்கை எடுக்க ஏற்­பாடு செய்­யப்­படும்.இலங்கை வைத்­திய நிர்­வாக தரத்­தி­லுள்­ளோர்­க­ளுக்கும் பாரிய வெற்­றிடம் காணப்­ப­டு­கின்­றது. அந்­த­வ­கையில் 23 அனு­ம­திக்­கப்­பட்ட ஆள­ணியில் ஐந்து அதி­கா­ரி­களே நிரந்­த­ர­மாக சேவை­யாற்­று­கின்­றனர். எனவே, சுகா­தாரத் துறையின் வினைத்­தி­ற­னான பங்­க­ளிப்­பிற்கு உட­ன­டி­யாக இவ்­வெற்­றி­டங்­களை நிரப்­பு­வ­தற்கு மத்­திய அர­சாங்கம் மூலம் நட­வ­டிக்கை எடுக்க ஆவன செய்­யப்­படும். வட­மா­கா­ணத்­தி­லுள்ள பெரிய வைத்­தி­ய­சா­லை­களில் வைத்­திய நிபு­ணர்கள் மத்­திய சுகா­தார அமைச்­சினால் நிய­மிக்­கப்­பட்­டுக்­கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

அவர்­களின் வினைத்­தி­ற­னான விசேட வைத்­திய சேவை­க­ளைப்­பெற்­றுக்­கொள்­வ­தற்கு தாதிய உத்­தி­யோ­கத்­தர்கள், நிறைவுகாண் மருத்­துவ சேவை உத்­தி­யோ­கத்­தர்கள் மற்றும் துணை­ம­ருத்­துவ சேவை உத்­தி­யோ­கத்­தர்கள் ஆகி­யோரை நிய­மிப்­ப­தற்கும் பொருத்­த­மான வைத்­திய உப­க­ரண வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுப்­ப­தற்கும் நட­வ­டிக்கை எடுக்­கப்­படும்.போருக்­குப்பின் மீண்­டெழும் மாவட்­டங்­க­ளான கிளி­நொச்சி மற்றும் முல்­லைத்­தீவில் அடிப்­படை வச­தி­க­ளே­யற்ற கிரா­மப்­புற வைத்­தி­ய­சா­லை­களில் கட­மை­யாற்றும் உத்­தி­யோ­கத்­தர்­க­ளுக்­கான தங்­கு­மிட வச­தி­களை ஏற்­ப­டுத்­திக்­கொ­டுக்­க­வேண்­டிய தேவை­யுள்­ளது.

வட மாகா­ணத்­தி­லுள்ள வைத்­தி­ய­சா­லை­களில் மருத்­துவ கழி­வு­களை சீராக முகா­மைத்­துவம் செய்­வ­தற்­காக மீள்­கு­டி­யேற்ற அமைச்­சினால் ஐந்து மாவட்­டங்­க­ளிற்கும் தலா ஒவ்­வொரு மருத்­து­வக்­க­ழிவு எரி­உ­லை­களை அமைப்­ப­தற்கு ஏற்­பாடு செய்­யப்­பட்­டுள்­ளது.முல்­லைத்­தீவு மாவட்­டத்தில் தற்­போது பிர­தேச வைத்­தி­ய­சா­லை­யா­க­வுள்ள மல்­லாவி , புதுக்­கு­டி­யி­ருப்பு மற்றும் முருங்கன் வைத்­தி­ய­சா­லைகள் தர­மு­யர்த்­து­வ­தற்கு நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்­டுள்­ளது.பல்­வேறு திட்­டங்­க­ளி­னூ­டாக சுகா­தாரத் தொண்­டர்­க­ளாக கட­மை­யாற்­றி­ய­வர்­களை பொது­நிர்­வாக சுற்­ற­றிக்கை இலக்கம் 25/2014(1) இன்­படி தொடர்ச்­சி­யாக 180 நாட்கள் கட­மை­பு­ரிந்­த­வர்­க­ளுக்கு நிரந்­தர நிய­மனம் வழங்­கப்­பட்­ட­மைக்கு நன்றி தெரி­விப்­ப­தோடு மேலும் எமது மாகாணத்தில் 789 சுகா­தாரத் தொண்­டர்கள் எது­வித கொடுப்­ப­ன­வு­மின்றி பல இன்னல்­க­ளுக்கு மத்­தியில் 10,15 வரு­டங்­க­ளுக்கு மேலாக கட­மை­யாற்­று­கின்­றார்கள். இவர்கள் மருத்­துவ மாது வெற்­றி­ட­மா­க­வுள்ள பிர­தே­சங்­களில் மிக இக்­கட்­டான நிலை­மை­களில் விசே­ட­மாக நோய்த்­த­டுப்பு பிரிவில் சேவை­யாற்­றி­ய­வர்கள்.எனவே இவர்­க­ளையும் நிரந்­தர நியமனம் வழங்க நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வேண்டும்.

அத்­துடன் இவர்­க­ளுக்­கான ஆளணி அனு­ம­தி­யினை முகா­மைத்­துவ சேவைகள் திணைக்­க­ளத்­தி­லி­ருந்து பெறப்­ப­டு­வ­தற்கு ஆவன செய்ய முயற்­சிகள் எடுக்­கப்­படும். விபத்­துக்­களின் போதும், அவசர மருத்துவ நிலைகளின் போதும் நோயா-ளர்களை வைத்தியசாலைகளிற்கு இட-மாற்று-வ-தற்கான அவசர அம்புலன்ஸ் சேவை-யொன்று ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்க–ப்படும். அத்துடன் மாகாண சுதேச மருத்துவ திணைக்களம் 75 ஏக்கர் நிலத்தில் மூலிகைத் தோட்டமும் சித்த மருத்துவத்துக்கு தேவையான மருந்து உற்பத்தி செய்வதற்கான தொழிற்சாலையும் சுதேச வைத்தியத்திற்கான சுற்றுலா வசதிகளும் பரம்பரை வைத்தியர்களின் விஞ்ஞான ரீதியான அறிவை மேம்படுத்தும் நடவடிக்கைக்கான சுதேச வைத்திய பாட-சாலை ஒன்று நிறுவ நடவடிக்கை எடுக்-கப்படும் என்றார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.