மகாவலி பிரதீபா கலை விழா ஜனாதிபதி தலைமையில்

40ddf313cc0e04f05a48cfb1924ff9cd_Lமகாவலி பிரதீபா கலை விழா ஜனாதிபதி தலைமையில் நேற்று முந்தினம் (22) பிற்பகல் தாமரைத் தடாகம் கலையரங்கில் நடைபெற்றது.
மகாவலி வலயங்களில் வதியும் மகாவலி பிள்ளைகளின் கலைத் திறனை உலகிற்கு எடுத்துக்காட்டி பல்வேறு கஷ்டங்களுக்கு மத்தியில் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் பிள்ளைகளுக்கு கல்வித்துறைக்கு உதவும் நோக்குடன் ஸ்தாபிக்கப்பட்டுள்ள மகாவலி மன்றம் புலமைப் பரிசில் நிதியத்திற்கு உதவிகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த கலை விழா நடைபெறுகின்றது.

உயர்தரப் பிரிவில் கல்வி கற்கும் கலைத் திறன்களை உடைய பிள்ளைகளுக்கு மகாவலி மன்றத்தின் நான்கு புலமைப் பரிசில்களை அடையாளமாகவும் எல்லா மகாவலி வலயங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் திறமையான 10 நாட்டியக் குழுக்களை கௌரவிப்பதற்காக அதன் தலைவர்களுக்கு விருதுகளும் சான்றிதழ்களும் ஜனாதிபதியினால் இங்கு வழங்கி வைக்கப்பட்டது.

மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள 10 நிறுவனங்களின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் ஒரு நாள் சம்பளம் மகாவலி மன்றத்தின் புலமைப் பரிசில் நிதியத்திற்காக ஜனாதிபதி அவர்களிடம் இதன்போது கையளிக்கப்பட்டது. மேலும் இலங்கை வங்கி மற்றும் பிரதேச அபிவிருத்தி வங்கியினால் உமா ஓய கருத்திட்டத்தில் செயற்படும் பாராப் என்ற ஈரானிய நிர்மாணத்துறை கம்பனியினால் மகாவலி மன்றத்தின் புலமைப் பரிசில் நிதியத்திற்காக வழங்கப்பட்ட நன்கொடையும் ஜனாதிபதியிடம் கையளிக்கப்பட்டது.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி மகாவலி வலயங்களில் வதியும் மகாவலி பிள்ளைகளின் கலைத் திறன்களை உலகிற்கு எடுத்துக் காட்டவும் மகாவலி புலமைப்பரிசில் நிதியத்தை பலப்படுத்துவதற்காகவும் நடாத்தப்படும் இந்த கலை விழா காலத்திற்கேற்ற ஒரு நிகழ்வாகுமெனக் குறிப்பிட்டார்.

மகாவலி மன்ற புலமைப் பரிசில் நிதியத்திற்கு தமது ஒரு நாள் சம்பளத்தை அன்பளிப்பு செய்த மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களுக்கும் அனுசரணை வழங்கிய ஏனைய நிறுவனங்களுக்கும் ஜனாதிபதி தமது நன்றிகளைத் தெரிவித்தார்.

இந்த நிகழ்வில் மகாவலி அபிவிருத்தி சுற்றாடல் பிரதி அமைச்சர் அநுராத ஜயரட்ன, அமைச்சின் செயலாளர் உதய ஆர்.செனவிரட்ன, மகாவலி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் அநுர திசாநாயக்க ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.