அபிவிருத்தி அடைந்த நாடுகள் பூகோள பச்சை வீட்டு வாயு வெளியீட்டினை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது

8014972ab4c628704fe7b7c50b00db60_Lவரலாற்று ரீதியான பொறுப்பினை கருத்திற் கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளினால் மேற்கொள்ளப்படும் பூகோள ரீதியான பச்சை வீட்டு வாயு வெளியீட்டினை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.
பொதுவான கடமைகள் தொடர்பான எண்ணக்கருவினை பின்பற்றும் தேவை எமக்கு இருந்த போதும் இந்த நூற்றாண்டில் வெப்பத்தின் வளர்ச்சியானது இரண்டு பாகை செல்ஸியசிற்கு குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக எம்மிடம் பல்வேறு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆற்றல் நம்மிடம் காணப்படல் வேண்டும் என்றும் ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

நேற்று (30) பிரான்சின் பரிஸ் நகரில் இடம்பெற்ற ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

நேற்று (30) பிரான்சின் பரிஸ் நகரில் இடம்பெறும் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஆற்றிய உரையின் முழு வடிவம்:

அபிவிருத்தி அடைந்து வரும் ஒரு நாடாகவும் அயன மண்டல நாடாகவும் காணப்படும் இலங்கையானது பாரியளவில் காலநிலை மாற்றங்களுக்கு உள்ளாகின்ற ஒரு நாடாகும். வெப்பநிலை மாற்றம், மழை வீழ்ச்சி மாற்றம் மற்றும் கடல் மட்டம் உயர்வடைதல் என்பன விவசாயம், கடற்றொழில், கால்நடை வளங்கள், நீர், உயிரியல் பல்வகைமை, சுகாதாரம், மானுடக் குடியேற்றங்கள், சுற்றுலா கைத்தொழில் மற்றும் போக்குவரத்து உள்ளிட்ட எமது நாட்டின் பொருளாதாரத்தின் அனைத்து துறைகளையும் நேரடியாக பாதிக்கின்றது.

வறட்சி, வெள்ளம் மற்றும் மண்சரிவு ஆகியன காரணமாக ஏற்படும் இயற்கை அனர்த்தங்கள் இலங்கை மக்களின் உயிர்களுக்கும் வாழ்வாதாரத்திற்கும் பாரிய இழப்புக்களை உண்டு பண்ணுகிறது. தொழில்நுட்பத்தை அபிவிருத்தி அடைந்துவரும் நாடுகளில் அறிமுகப்படுத்துவதன் ஊடாக அந்நாட்டு மக்களுக்கு வானிலை நிலைமைகளுக்கு ஏற்ப செயற்படும் ஆற்றலையும் அவற்றை குறைப்பதற்காக தேசிய ரீதியில் பொருத்தமான செயற்பாடுகளை மேற்கொள்ளும் ஆற்றலையும் உறுதி செய்ய முடியும்.

பூகோள பொருளாதாரத்தில் எமது தனிநபர் தூய்மை மிகவும் குறைந்த மட்டத்தில் காணப்பட்டாலும் காலநிலை மாற்றங்களை குறைப்பதற்காக பூகோள ரீதியில் மேற்கொள்ளப்படும் முயற்சிகளில் நாமும் பங்களிப்புச் செய்துள்ளதுடன் எதிர்காலத்திலும் பங்களிப்புச் செய்யவுள்ளோம். எமது நாட்டை நோக்குமிடத்து இலங்கையின் காலநிலைக்கு சாதகமான நிகழ்ச்சித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதென்பதை மகிழ்ச்சியுடன் நான் அறியத்தருகின்றேன்.

1988 இல் மோல்டாவில் காலநிலை மாற்றங்கள் தொடர்பான ஐக்கிய நாடுகளின் இணக்கப்பாட்டை முன்னெடுப்பதற்கு வழிகாட்டிய வரலாற்று ரீதியான ஆரம்பத்தினை நாம் இனங்கண்டோம். காலநிலை தொடர்பாக மேற்கொள்ளப்படவுள்ள இணக்கப்பாட்டின் ஒரு பகுதியாக ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டினை தேசிய ரீதியாக மேற்கொள்வதற்கு எண்ணியுள்ள பங்களிப்புக்கள் பற்றி தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ் வரலாற்று ரீதியான பொறுப்பினை கருத்திற் கொண்டு அபிவிருத்தி அடைந்த நாடுகளினால் மேற்கொள்ளப்படும் பூகோள ரீதியான பச்சை வீட்டு வாயு வெளியீட்டினை பாரியளவில் குறைக்கும் தேவையுள்ளது. பொதுவான கடமைகள் தொடர்பான எண்ணக்கருவினை பின்பற்றும் தேவை எமக்கு இருந்த போதும் இந்த நூற்றாண்டில் வெப்பத்தின் வளர்ச்சியானது இரண்டு பாகை செல்ஸியசிற்கு குறைந்த மட்டத்தில் பேணுவதற்காக எம்மிடம் பல்வேறு பொறுப்புக்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், அதற்கான ஆற்றல் நம்மிடம் காணப்படல் வேண்டும்.

பாரிஸில் நடைபெறும் காலநிலை மாற்றங்கள் தொடர்பான மாநாட்டின் வெற்றியை எதிர்பார்க்கும் இலங்கை பச்ச வீட்டு வாயு உமிழ்வினை பாரியளவில் குறைத்தல், பூகோள வெப்பம் மற்றும் முன் எப்போதும் இல்லாத காலநிலை மாற்றங்களின் பாதிப்பு என்பவற்றை குறைப்பதற்கான சட்ட ரீதியான இணக்கப்பாடுகளை ஏற்படுத்த ஆர்வமாக உள்ளது.

இறுதியாக கௌரவ தலைவர் அவர்களே, தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியினருக்காக இலங்கையின் இதயபூர்வமான எதிர்பார்ப்பாக பொதுநலவாய நாடுகளின் காலநிலை தொடர்பான செயன் முறையானது தற்சமயம் இடம்பெறும் இவ்வுரையாடலுக்கான பாலமாக அமையும்.
இவ்வுலகில் பிறந்த சிரேஷ்ட சூழல்வாதி புத்தபெருமானே என பௌத்த மதத்தைப்
பின்பற்றும் ஒரு நபர் என்ற வகையில் நான் பலமாக நம்புகின்றேன்.

நிலையான அபிவிருத்திக் கொள்கை தொடர்பாக எமக்கு உபதேசித்த முதலாவது
சிந்தனைவாதியும் அவர் தான்.

எமக்கு விருந்தோம்பல் அளித்து இச்சந்தர்ப்பத்தை வெற்றியடையச் செய்வதற்கு பேருதவியாக அமைந்த இதன் ஏற்பாட்டாளர்களுக்கு இலங்கை பிரதிநிதிகளின் சார்பாக நான் நன்றி தெரிவிக்கின்றேன் எனவும் தெரிவித்தார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.