இன்றைய அரசாங்கத்திலும் புணர்வாழ்வாளிக்கப்பட்ட போராளிகள் விசாரிக்கப்படுகின்றார்கள்! கலையரசன்

kalaiyarasan-a-1விடுதலை புலிகள் இயக்கத்தில் இருந்து புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள் இலங்கை இராணுவ புலனாய்வாளர்களால் விசாரிக்கப்படுவதும், அச்சுறுத்தப்படுவதும் அன்றைய அரசாங்கத்திலும் இருந்தது, இன்றைய அரசாங்கத்திலும் இருந்து கொண்டுதான் இருக்கின்றது என கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்தார்.
கல்விக்காய் ஏங்கும் கனவிற்கு விழியாய் நாமும் இணைவோம் எனும் அமைப்பின் ஏற்பாட்டில் பின் தங்கிய பாடசாலையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கான புத்தகப்பை, மற்றும் கொப்பிகள், எழுது கருவிகள் வழங்கி வைக்கும் நிகழ்வு அம்பாறை மாவட்டத்தின் நாவிதன் வெளி பிரதேசத்தில் நடைபெற்றபோது பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே இதனைத்தெரிவித்தார்.
இந்நிகழ்வானது சரஸ்வதி வித்தியாலயத்தின் முன்னால் அதிபர் கிருபைராசா தலைமையில் மீனவர் சங்க பொதுக்கட்டடத்தில் நேற்று நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கிழக்கு மாகாணசபை உறுப்பினர் த.கலையரசன் பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் முன்னால் நாவிதன்வெளி பிரதேசசபையின் தவிசாளர் குணரெத்தினம், மற்றும் அமைப்பின் உறுப்பினர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
இங்கு தொடர்ந்து உரையாற்றிய கிழக்கு மாகாணசபை உறுப்பினர்.
இந்த நாட்டிலே போராட்டங்கள் ஆரம்பிக்கப்பட்டதன் நோக்கம் தமிழர்கள் நிம்மதியாக சுயநிர்ணய உரிமையுடன் வாழவேண்டும் என்பதற்காகவேதான் ஆனால் அது தற்போது எமது மக்களுக்கு கிடைத்திருக்கின்றதா? ஏன்றால் கேள்விக்குறியாகவேதான் இருந்து வருகின்றது.
எவ்வாறான போராட்டங்களாக இருந்தபோதும் தமிழர்களாகிய நாங்கள் அனைத்து போராட்டங்களுக்கும் முகங்கொடுத்து வாழ்ந்து வருகின்றோம் அதே போனறுதான் இனிவரும் காலங்களிலும் கல்விக்கான போராட்டங்களை முன்னெடுப்பது காலத்தின் கட்டாய தேவையாகும்.
தற்கால உலக மாற்றத்திற்கு ஏற்ப பெற்றோர்கள் தங்களது குழந்தைகளை கல்வியில் ஈடுபடுத்த முயல்வதன் மூலந்தான் அந்தப்பிரதேசத்தில் கற்றவர்களையும், ஒழுக்கமுள்ளவர்களையும் உருவாக்க அந்த பிரதேசத்தில் உள்ள கல்வியலாளர்களை பெற்றோர்கள் பயன்படுத்த முயலவேண்டும்
இன்று இந்த நாட்டிலே போர்ச்சூழலால் பெரிதும் பாதிக்கப்பட்ட குறிப்பாக விடுதலை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கூட எந்தவிதமான உதவிகளும் அற்ற நிலையிலே இன்றும் தங்களது வாழ்க்கையை நடத்திவருகின்றார்கள் நல்லாட்சி அரசாங்கத்தில் கூட இவர்களுக்கான எந்த நிவாரணங்களும் இல்லாமல் இதனை யாரிடம் சென்று முறையிடலாம் என்ற ஏக்கத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்.
இவர்களுக்கான உதவிகளை புலம்பெயர்நாடுகளில் இருந்த பெற்றுக்கொடுக்க முனைகின்ற வேளையில் இவர்கள் அரச புலனாய்வாளர்களினால் அச்சுறுத்தப்படுவதுடன் அவர்களை அழைத்து விசாரிக்கின்ற தன்மையும் இன்றும் தொடர்ந்து கொண்டுதான் இருககின்றது.
புனர்வாழ்வு அளிககப்பட்வர்களுக்கான உதவிகளை அரசாங்கம் செய்து கொடுக்க வேண்டும் அவ்வாறு செய்து கொடுக்கும் பட்சத்தில் அவர்கள் எங்களை நாடிவரவேண்டிய தேவை அவர்களுக்கு இருக்காது இவர்களுக்கான எந்த உதவியும் கிடைக்காததன் காரணமாகவேதான் அவர்கள் அரசியல் வாதிகளை நாடி வருகின்றார்கள்.
மகிந்த அரசாங்கத்தில் இருந்துவந்த அனைத்து செயற்பாடுகளும் தற்போதைய நல்லாட்சி அரசாங்கத்திலும் இருந்து கொண்டுதான் வருகின்றது அதற்கு பல உதாரணங்களைஎடுத்துக்காட்ட முடியும் குறிப்பாக அண்மையில் பொத்துவில் கனகர் கிராமத்தில் பூர்வீகமாக வாழ்ந்த எமது மக்களின் காணிகளை அரச வனபரிபாலன இலாகாவினர் கையகப்படுத்தும் நோக்குடன் அந்தக்காணிகளுக்குள் சென்று எல்லைகள் போடும் அளவிற்கு இவர்களது அடாவடிகள் தொடர்ந்து கொண்டு செல்கின்றது.
இதனை உரியவர்களின் கவனத்திற்கு எடுத்தியம்பி அதனை தடுத்து நிறுத்தியிருக்கின்றோம் அம்பாறை மாவட்டத்தில் எதை செய்வதென்று தெரியாதளவிலே அரசியல்வாதிகளாக இருக்கும் நாங்கள் தத்தளித்துக்கொண்டு இருக்கின்றோம்.
அரச சேவையில் சமத்துவம் பேணப்படவில்லை ஆனால் கிழக்கு மாகாணத்தில் சமத்துவம் பேணப்படவேண்டும் என்ற அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்பட்டது அந்த நியமனங்களில் பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் இம்மாவட்டத்தில் உள்ள தமிழ் பட்டதாரிகள் தற்போது எதிர்காலத்தில் வீதாசார அடிப்படையில் நியமனங்கள் வழங்கப்படும் போதும் இம்மாவட்டத்தில் உள்ள தமிழ் பட்டதாரிகளே பாதிக்கப்படும் நிலை காணப்படுகின்றது இவ்வாரான செயற்பாடுகளை அனைவரும் கருத்தில் எடுத்து செயற்படவேண்டும்.
இன்று புலம்பெயர்ந்து வாழும் பல உறவுகள் அம்பாறை மாவட்ட மக்களின் நிலை அறிந்து உதவிகளை செய்து கொண்டு வருகின்றார்கள் அதனொரு கட்டமாகவே இன்று வட புலத்தில் இருந்து இங்கு வந்து எமது பிரதேச மாணவர்களின் எதிர்கால கல்வி நடவடிக்கையை மேம்படுத்தும் நோக்கத்துடன் அவர்களுக்கான கற்றல் உபகரணங்களை வழங்கியிருப்பது மிகவும் பாராட்டத்தக்க விடயமாகும் அதனை மாணவர்கள் சிறந்த முறையில் பயன்படுத்தி கல்வியினை கற்று எதிர்காலத்தில் நல்லவர்களாக வாழவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.