நீர் வழங்கல் சபை ஊழியர்கள் கொடுப்பனவை சரியாக வழங்கக் கோரி பணிபகிஷ்கரிப்பில்

26dec13நீர் வழங்கல் சபை ஊழியர்கள் பணிபகிஷ்கரிப்பை ஆரம்பித்துள்ளனர்.2015 ஆம் ஆண்டிற்கான மேலதிக கொடுப்பனவு குறைத்து வழங்கியமைக்கு எதிராக இந்த பணிபகிஷ்கரிப்பு முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் ஒன்றிணைந்த தொழிற்சங்கங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் உபாலி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். தங்களின் கோரிக்கைகளுக்கு உரிய தீர்வு கிடைக்காவிட்டால், தொடர்ந்தும் பணிபகிஷ்கரிப்பை முன்னெடுப்பதாக அவர் கூறியுள்ளார்.

மேற்பார்வை நடவடிக்கைகள் இன்றும், நாளையும் முன்னெடுக்கப்படாமையால் நீர் விநியோகித்திற்கு தடங்கல் ஏற்படுவதற்கு இடமுள்ளதாகவும் நீர் வழங்கல் ஒன்றிணைந்த தொடழிற்சங்க கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் மேலும் தெரிவித்துள்ளார். இந்த தொழிற்சங்க நடவடிக்கை குறித்து தேசிய நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் தலைவர் அலாவுதீன் அன்சாரிடம் வினயபோது, 75 வீதமான மேலதிக கொடுப்பனவு ஏற்கனவே வங்கிகள் ஊடாக செலுத்தப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார்.

எஞ்சிய 25 வீதத்தையும் திங்கட்கிழமை ஊழியர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல், வடிகாலமைப்பு சபையின் தலைவர் கூறினார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.