மகனை திருத்துவதற்காக கஞ்சா வழக்கில் மாட்டி வைத்த தாய்

kerala_kanjaaதனது புத்திமதிகளைக் கேளாது பல்வேறு துர்நடத்தைகளில் ஈடுபட்டுவந்த 29 வயது மகனை கஞ்சா வழக்கில் மாட்டி சிறைக்கு அனுப்பிவைத்த தாய் ஒருவரைப் பற்றிய தகவலை வெலிகம பொலிஸார் நேற்று வெளியிட்டுள்ளனர். தீய நண்பர்களுடன் சேர்ந்து கஞ்சா விற்பதில் ஈடுபட்டிருந்த இவரது மகன் நாளடைவில் கஞ்சா புகைப்பதற்கும் பழகிவிட்டார்.

தாயின் புத்திமதிகளைக் கேளாமல் தான்தோன்றித்தனமாக நடந்து கொண்டிருந்த அவரைப் பற்றிய தகவலை தாய் வெலிகம பொலிஸாருக்கு தெரிவித்ததையடுத்து அவர்கள் மகனைக் கைதுசெய்து அவரிடமிருந்து 12 மில்லிகிராம் கஞ்சாவையும் கைப்பற்றினர். சந்தேகநபர் மாத்தறை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட பின் எதிர்வரும் ஜனவரி 10ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.