மலையகத்தில் 168 எயிட்ஸ் நோயாளர்கள்

sirumi_jaffna-1-300x194deபதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா ஆகிய மாவட்­டங்­களில் 168 எயிட்ஸ் நோயாளர்கள் இனங்­கா­ணப்­பட்­டுள்­ள­தாக எயிட்ஸ் நோய் தடுப்புப் பிரிவின் இயக்­குநர் வைத்தியர்.சிசிர லிய­னகே தெரி­வித்­துள்ளார்.

பெருந்­தோட்டப் பகுதிகளில் எயிட்ஸ் நோய் பரவி வரும் அபாயம் அவதானிக்கப்­பட்­டுள்­ளது.

இதற்கமைய இது­வ­ரை 168 பேர் பதுளை, கண்டி மற்றும் நுவ­ரெ­லியா மாவட்டங்­களில் இனங்­கா­ணப்­பட்­டுள்­ளனர்.

15 முதல் 25 வய­துக்­குட்­பட்­ட­வர்­களே இவ்­வாறு இனங்­கா­ணப்­பட்­டுள்­ளதாகவும் அவர்­களில் 27 பேர் யுவ­திகளும் 6 பாட­சாலை மாண­வியர்களும் உள்ளடங்குவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் பெருந்­தோட்டப் பகுதிகளில் வாழும்மக்கள் இது தொடர்பில் எச்­ச­ரிக்­கை­யா­க செயற்­பட வேண்டும் என்பதுடன் பாட­சாலை மாண­வி­யரின் நடவடிக்கைகளில் பெற்றோரும் ஆசிரியர் சமூகமும் அதிக கவனம் செலுத்த வேண்டுமெனவும் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.