வவுனியாவில் ஊடகவியலாளரை தாக்கியவருக்கு 28 ஆம் திகதி வரை விளக்கமறியல்

9a1339888bdaeef288feabb16cc71bf0வவுனியாவைச் சேர்ந்த ஊடகவியலாளரை தாக்கிய நபரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

வவுனியா நகரில் செய்தி சேகரித்துக்கொண்டிருந்தபோது வர்த்தக நிலையத்தில் பணியாற்றிய ஒருவர் ஊடகவியலாளரை தாக்கியமை தொடர்பாக கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரை,

இன்று வெள்ளிக்கிழமை வவுனியா நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தியபோதே எதிர்வரும் 28 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதன்போது ஊடகவியலாளர் சார்பில் சட்டத்தரணி க.ஞா.அலஸ்டினும் சந்தேகநபர் சார்பில் சட்டத்தரணி க.தயாபரனும் ஆஜராகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

வவுனியா நகர்ப் பகுதியில் சட்டவிரோதமாக வீதியை ஆக்கிரமித்து, வர்த்தகர்களின் கொட்டகையை வவுனியா நகரசபை அகற்றிய போது செய்தி சேகரித்துக் கொண்டிருந்த வவுனியா மாவட்ட ஊடகவியலாளரான பா. கதீசன் மீது இவ்வாறு தாக்குதல் நடத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.