சீனாவுக்குப் பறக்கிறார் மகிந்த!

Ppresident-Mahindaமுன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ நான்கு நாள் பயணம் மேற்கொண்டு ஜனவரி மாதம் 11ஆம் திகதி சீனாவுக்குச் செல்லவுள்ளார். அங்கு மஹிந்த அரசியல் மட்டத்திலான சந்திப்புகளில் ஈடுபடவுள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த பின்னர் மஹிந்த ராஜபக்‌ஷ மேற்கொள்ளும் முதலாவது வெளிநாட்டுப் பயணம் இதுவாகும்.
மஹிந்தவின் சீனப் பயணம் தொடர்பில் கருத்து வெளியிட்ட அவரது பேச்சாளரான ரொஹான் வெலிவிட்ட, சர்வதேச மட்டத்தில் நெருக்கடியான சூழ்நிலைகளின்போது இலங்கைக்கு நேசக்கரம் நீட்டிய சீனாவுக்கு நன்றி தெரிவிப்பதற்கும் பாராட்டுவதற்காகவுமே அவர் அங்கு செல்கின்றார் என்றும், ஜனவரி இரண்டாம் வாரத்தில் அவரது விஜயம் அமையும் என்றும் குறிப்பிட்டார்.
மஹிந்த ஆட்சியின் வெளிவிவகாரக் கொள்கையில் சீனாவுக்கு அதிக முக்கியத்தும் கொடுக்கப்பட்டது. அந்நாட்டுடன் முக்கிய உடன்படிக்கைகளிலும் கைச்சாத் திடப்பட்டன. இதனால் அயல்நாடான இந்தியா மஹிந்த ஆட்சிமீது கடும் சீற்றத்தில் இருந்தது. சீனாவின் நீர்மூழ்கிக் கப்பல்கள் கொழும்பு வந்த விவகாரம் டில்லியை கடும் கோபத்துக்கு உள்ளாக்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அத்துடன், மஹிந்த ஆட்சியின்போது சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு சீனா பெரிதும் உதவி வந்தது. பாதுகாப்புச் சபையில் இலங்கைக்காக வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தியதுடன், ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் அமெரிக்க கொண்டுவந்த தீர்மானங்களையும் கடுமையாக எதிர்த்து வாக்களித்தது.
மஹிந்த ஆட்சியின்போது 2014ஆம் ஆண்டில் சீன ஜனாதிபதி ஜிங் பிங் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவரது பயணத்தின்போதுதான் கொழும்பு துறைமுக நகர்த்திட்டமும் ஆரம்பித்துவைக்கப்பட்டது.
எனினும், ஆட்சிமாற்றத்தின் பின்னர் சீனாவின் உதவியுடன் மஹிந்த ஆட்சியில் முன்னெடுக்கப்பட்ட கொழும்பு துறைமுகத் திட்டத்தை புதிய அரசு நிறுத்தியதால் பீஜிங் அதிருப்தியடைந்தது. தொடர் இராஜதந்திர சந்திப்புகளையும் நடத்தியது.
தற்போது இரு நாட்டுக்கும் இடையிலான உறவு சுமுகமடைந்து வருகின்றது. இவ்வாறானதொரு பின்புலத்திலேயே மஹிந்தவின் சீனா விஜயம் அமைகின்றது.
– See more at: http://www.jaffnazone.com/?p=26968#sthash.zKKS0sSP.dpuf

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.