அவுஸ்திரேலியாவில் வர்த்தக நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள ரவிராஜ் கொலை சந்தேகநபர்?

28dec12இலங்கையின் முக்கிய நாடாளுமன்ற உறுப்பினரும் மனித உரிமை ஆர்வலருமான ரவிராஜின் கொலையுடன் தொடர்புபட்டுள்ளார் என சந்தேகிக்கப்படும் பொலிஸ்; உத்தியோகத்தர் ஓருவர் அவுஸ்திரேலியாவில் மறைந்து வாழ்வதுடன் அங்கு வர்த்தகமொன்றில் ஈடுபட்டுள்ளார் என தெரியவருகின்றது.

குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் பெயர் பேபியன் ரோய்ஸ்டன் டுசைன்ட்(Fabian Royston Toussaint )என்பதை உறுதிசெய்துள்ள இலங்கை பொலிஸார் அவரை கைதுசெய்வதற்கு அவுஸ்திரேலிய பொலிஸாரின் உதவியை நாடியுள்ளதை உறுதிசெய்துள்ளனர்.

குறிப்பிட்ட நபர் சூழல் ஆலோசனை நிறுவனமொன்றை நடத்தி வருவதாகவும் அதன் உரிமையாளரான பெண்மணி தன்னை அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி பில்கிளின்டனின் நண்பர் என தெரிவித்துவருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவுஸ்திரேலியாவின் பத்திரங்கள் மற்றும் நிதி ஆணையத்தின் இந்த மாத ஆவணங்களில் குறிப்பிட்ட சந்தேகநபர் எக்கோ சப்போர்ட் கொன்சல்டிங் என்ற தனியார் நிறுவனத்தின் இயக்குநர் என குறிப்பிட்டுள்ளது.இந்த நிறுவனம் 2014ம் ஆண்டில் மலேசியாவை சேர்ந்த வர்த்தகரான மாலினி வென்டுரா என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. ஆஸியின் விக்டோரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது பெயரை மாலினி சபா என மாற்றிக்கொண்டுள்ள அந்த பெண்மணி 2010 இல் சிட்னியில் , பிரிஸ்பேர்னில் கிளின்டனிற்கு நிதி திரட்டுவதற்கான விருந்துபசாரங்களுடன் தொடர்புபட்டிருந்தவர். எனினும் அந்த நிகழ்ச்சி பின்னர் மர்மமான முறையில் இரத்துசெய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

எனினும் அவர் எந்தவித கொலைகளுடன் தொடர்புபட்டிருந்தார்,குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர்களின் நடவடிக்கைகளுடன் அவரிற்கு தொடர்பிருந்தது என்ற கோணத்திலோ எந்த தகவலும் வெளியாகவில்லை.

குறிப்பிட்ட பொலிஸ் உத்தியோகத்தர் தனது நிறுவனத்தில் பணியாற்றியதாகவும் அவர் மீதான குற்றச்சாட்டுகள் தெரியவந்ததும் அவரை தனது நிறுவனத்திலிருந்து விலக்கிவிட்டதாகவும் குறிப்பிட்ட பெண் வர்த்தகபிரமுகர்தெரிவித்துள்ளார்.

இலங்கையை சேர்ந்த அந்த பொலிஸ் அதிகாரி சுற்றுலாப்பயணியாகவே ஆஸி வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்,ஆனால் அவர் தற்போது எங்கிருக்கின்றார் என்பது தனக்கு தெரியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.குறிப்பிட்ட நிறுவனம் தற்போது இயங்கவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த வாரம் இலங்கையைசேர்ந்த பொலிஸ் அதிகாரிஅனுரத்த பொல்வத்தை ரவிராஜ் கொலைதொடர்பில் குறிப்பிட்ட நபரிற்கு எதிராக பிடியாணைபிறப்பிக்கப்பட்டுள்ளதை உறுதிசெய்திருந்தார்,இலங்கைபொலிஸார் இரண்டு மாதங்களிற்கு முன்னரே அவுஸ்திரேலிய பொலிஸாரை இந்த விடயம் தொடர்பில் தொடர்பு கொண்டுள்ளனர்,ஆனால் உரிய பதில் எதுவும் கிடைக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

சூழல் ஆலோசனை நிறுவனத்திற்கும் சந்தேகநபரிற்கும் தொடர்பிருப்பது தங்களிற்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும்,அவர் ஓரு பொலிஸ் உத்தியோகத்தர். அவர் இந்த விடயத்தில் நிபுணத்துவம் உள்ளவரில்லை,எனவும் இலங்கை பொலிஸ் அதிகாரி தெரிவித்தார்.

ரவிராஜ் படுகொலை சந்தேகநபர் ஐந்து வருடங்களிற்கு முன்னரே இலங்கையிலிருந்து வெளியேறிவிட்டார், அவர் அரசியல் புகலிடம் கோரியிருக்கலாம் எனவும் தெரிவித்த இலங்கை பொலிஸ் அதிகாரி இலங்கை நீதிமன்றத்தினால் தேடப்படும் நபர் அவர் எனவும் தெரிவித்தார்.

இதேவேளை குறிப்பிட்ட சந்தேகநபரை கைதுசெய்வதற்கு இலங்கை பொலிஸாரிற்கு ஓத்துழைப்பு வழங்கப்படுகின்றதா என கேள்வி எழுப்பியதற்கு ஆஸி பொலிஸார் பதில் அளிக்க மறுத்துள்ளனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.