இலங்கை மீன்பிடித் துறைக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம்

9b8e4769a01b57700e6532660fa593cf_Lஇலங்கை மீன்பிடித் துறை அபிவிருத்திக்கு ஆதரவு வழங்க அவுஸ்திரேலியா இணக்கம் தெரிவித்துள்ளதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அவுஸ்திரேலிய வர்த்தக ஆளுநர் க்ரேய்சன் பெரி (Grayson Perry) தலைமையிலான அவுஸ்திரேலிய வர்த்தக பிரதிநிதிகள் குழுவுக்கும் கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் மஹிந்த அமரவீரவுக்கும் இடையிலான சந்திப்பொன்று அண்மையில் கொழும்பில் நடைபெற்றது.

இடம்பெற்ற கலந்துரையாடலின் போது கருத்து தெரிவித்த அவுஸ்திரேலிய வர்த்தக ஆளுநர், மீன்பிடி கைத்தொழில் துறையில் தேவையான அறிவு மற்றும் பயிற்சி நெறிகள், அத்துடன் அவுஸ்திரேலியாவில் பின்பற்றப்பட்டு வரும் முறைகள், என்பவற்றினை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி திணைக்களத்தின் அலுவலர்களுக்கும், இவ் அமைச்சின் கீழ் பணியாற்றி வரும் திணைக்கள அலுவலர்களுக்கும் மீன்பிடித்துறையில் பணியாற்றி வரும் அனைத்து அதிகாரிகளுக்கும் வழங்க தாம் தயாராகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் கருத்து தெரிவித்த அமைச்சர், இது குறித்து தமது பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்ததுடன், இதன்மூலம் இருநாடுகளுக்கிடையிலும் தொழில்நுட்ப ரீதியிலான ஒத்துழைப்புக்கள் அதிகரிக்கப்படுமெனவும் தெரிவித்தார்.

கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அபிவிருத்தி அமைச்சின் செயலாளர் திருமதி டபிள்யூ.எம்.எம்.ஆர்.அதிகாரி, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்து ஆலோசகர் சார்லேங் புலுன்டல் (Charlotte Blundell), NARA திணைக்களத்தின் தலைவர் கலாநிதி அனில் பிரேமரத்ன, மற்றும் பல அதிகாரிகள் எனப்பலரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

Recommended For You

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.