
தன்னைக் கொலை செய்யப் போவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளர் தி.துவாரகேஸ்வரன், அச்சுறுத்தல் விடுத்ததாக யாழ்ப்பாண ஊடகவியலாளர் ஒருவர் நேற்று யாழ். பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். அலைபேசியின் தன்னை தொடர்புகொண்ட துவாரகேஸ்வரன், கழுத்தை வெட்டிக் கொலை செய்வேன் என்றும், வீடு புகுந்து தூக்குவேன் எனவும் தன்னை மிரட்டியதாக ஊடகவியலாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார். முறைப்பாட்டின் பிரகாரம் யாழ்ப்பாணப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.