சிங்களத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அமைப்பு உருவாக்கம்

b619988ff53ff1b703978fcc244c576eசிங்களத்தின் அடையாளத்தை பாதுகாக்கும் நோக்கில் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது. சிங்கள ஜாதிக்க பலமுலுவ என்ற குறித்த அமைப்பின் முதலாவது செய்தியாளர் சந்திப்பு கொழும்பில் நேற்று நடைபெற்றது.

சிங்களத்தின் அடையாளத்தை பாதுகாப்பதற்கும், சிங்கள மக்களின் மேலாதிக்கம் மற்றும் பெருமையை மீண்டும் உருவாக்குவதற்கும் என புதிய அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளதாக அதன் தலைவர் யக்கலமுல்ல பவரா தேரர், நேற்றைய ஊடக சந்திப்பில் குறிப்பிட்டார்.

சிங்கள மக்கள் கடந்த காலங்களில் மௌமாக இருந்தாலும் தற்போது தமது அடையாளத்தை பாதுகாக்கும் விரும்பம் மக்களிடையே காணக் கூடியதாக உள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்களின் நலனுக்காக பணியாற்றவும் அவர்களின் உரிமைகளை பாதுகாக்கவும் என இந்த அமைப்பை உருவாக்கியுள்ளதாக குறிப்பிட்ட சிங்கள ஜாதிக அமைப்பின் தலைவர் பலமுலுவ யக்கலமுல்ல பவரா தேரர், தமது அமைப்பு அரசியல் நோக்கம் கொண்டதல்ல எனவும் கூறியுள்ளார்.

Recommended For You

About the Author: சேது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.